பொது செய்தி

இந்தியா

வீடியோ காலில் திருமணம் செய்த ஜோடி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Lockdown, Marriage, Delhi, Mumbai, Coronavirus, Corona, Covid-19, Curfew, travel ban, ஊரடங்கு, திருமணம், டில்லி, மும்பை, வீடியோகால்

மும்பை: ஊரடங்கு உத்தரவால் மும்பையை சேர்ந்த நபருக்கும், டில்லியை சேர்ந்த பெண்ணுக்கும் வீடியோ கால் மூலமாக திருமணம் நடந்தேறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கூட்டம் கூடும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது எனவும், சமூக விலகலை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். இதனால், திட்டமிடப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 29 வயதான வணிகக் கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டில்லியை சேர்ந்த நீத் கவுர் என்ற பெண்ணுக்கும் வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றது.


latest tamil news


இருவருக்கும் ஏப்.,04ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களின் உறவினர்கள் துபாய், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர முடியாமல் தவித்துள்ளனர். இதனால் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அனைவரும் வீடியோ கால் மூலம் இணைந்து ப்ரீத் சிங் - நீத் கவுர் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தனர். அதன்படி, திருமணம் செய்ய தயாரான ஜோடிகள் அவரவர் வீட்டில் இருந்தவாறு திருமண உடையுடன் அமர்ந்திருந்தனர். பின்னர், உறவினர்கள் வீடியோ கால் மூலம் இணைய, அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து மணமகன் ப்ரீத் சிங் கூறுகையில், திருமணத்திற்காக ஆறு மாதங்கள் திட்டமிட்டிருந்ததால் மனமுடைந்தோம். வாகேகுருஜியின் ஆசீர்வாதம் இல்லாமல் திருமணம் முழுமையடையாது என நாங்கள் நம்புகிறோம். இதனால், சீக்கிய பாரம்பரியத்தின் படி திருமண விழா நடத்தப்படும். பின்னர், நாங்கள் ஒரு குருத்வாராவுக்கு செல்வோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஏப்-202011:59:08 IST Report Abuse
S. Narayanan கொரானாவுக்கும் இதே போல முதல்நிலையில் பாதிக்க பட்டவரை அவரவர் வீட்டிலேயே தங்க வைத்து அருகாமையில் இருக்கும் அரசு மற்றும் டாக்டர் உதவியுடன் வீடியோ காலில் சிகிச்சை அளித்தால் பாதிக்க பட்டவர் தனிமை என்ற கொடுமையான உணர்வு இல்லாமல் அவரவர் குடும்பத்தாரின் அன்பான அரவணைப்பில் சீக்கிரம் குணமாக வாய்ப்பு இருக்குமா என்பதை ஓரிரு சோதனைகள் செய்து அமுல் படுத்தினால் கொரநா பற்றிய பயமில்லாமல் விரைவில் குணமாக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. மேலும் பண விரயத்தையும் தடுக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X