பொது செய்தி

இந்தியா

கோடையில் கொரோனா தாக்கம் குறையுமா: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
WHO, Summer, coronavirus, உலக சுகாதார அமைப்பு, கோடை, வெப்பநிலை, கொரோனா வைரஸ், விளக்கம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கோடை காலம் துவங்குவது குறித்து பல நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், அதிக வெப்பநிலை வைரஸை முடிக்காது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகிறது. அவற்றுள் சில: அதிக வெப்பநிலை இருந்தால் கொரோனா பரவாது, மெத்தனால், எத்தனால், ப்ளீச் உள்ளிட்டவற்றை அருந்துவதால் வைரசை தடுக்கலாம், மது அருந்துவதால் அதிலுள்ள ஆல்கஹால் மூலமாக கொரோனா வராமல் பாதுகாப்பாக இருக்கலாம், சுவாச பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் பிரச்னை வராது கொரோனாவில் இருந்து தப்பலாம் போன்ற பல கட்டுக்கதைகளை மக்களிடையே பரவி வருகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என பல வல்லுநர்கள் அறிவுறுத்தியும், பொய்கள் உலாவ தான் செய்கிறது.


latest tamil newsஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பே பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: சூரிய வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்தாலும் கொரோனாவை தடுக்காது. வானிலை எப்படி இருந்தாலும், கொரோனா தொற்றலாம். வெப்பமான வானிலை கொண்ட நாடுகளில் கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் கைகளை அடிக்கடி மற்றும் முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்யுங்கள். உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


மது அருந்துதல்latest tamil newsமெத்தனால், எத்தனால் அல்லது ப்ளீச் குடிப்பதால் கொரோனாவை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவை பொருட்களின் மேற்பரப்பில் உள்ள வைரஸை சுத்தம் செய்ய பயன்படுபவை. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள வைரஸைக் கொல்லாது, ஆனால் உள் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். மது அருந்துவதால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாய் இருக்க முடியாது. அடிக்கடி அல்லது அதிகப்படியான மதுபானம் உட்கொள்வது சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

இருமல் அல்லது அசவுகரியமாம் இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க முடிந்தது எனில், கொரோனா வைரஸ் அல்லது வேறு எந்த நுரையீரல் நோயிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள் என அர்த்தமல்ல. நோயைப் பற்றி உறுதிப்படுத்த சிறந்த வழி ஆய்வக சோதனை. இந்த சுவாச பயிற்சியால் நீங்கள் அதை உறுதிப்படுத்த முடியாது, இது ஆபத்தானது கூட. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202020:11:25 IST Report Abuse
ocean kadappa india மூச்சு வழியாகத்தான் கொரோனா உள்ளே பாய்கிறது. அந்த குளிர் கால வைரஸ் விரும்பி தங்குமிடம் குளிர் நிலையில் இருக்கும் மனித நுரையீல் பகுதி. அது உள்ளே போனவழியிலிருந்தே அதை வெளியே விரட்ட மூச்சடக்க பயிற்சி தேவை. வெளிநாட்டவர்களுக்கு பிராணாயாமம் என்றால் என்ன என்பது பற்றி தெரியாது. யோக பயிற்சியோ தியான பயிற்சியோ தெரியாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆமென். கொரோனா 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கரைந்து விடும் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பினர் அது 25 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலைக்கு மேலும் இருக்கும் என்று பொத்தாம் போக்காக கூறுகின்றனர். உஷ்ண நாடுகளிலும் பரவும் என்று சொல்கின்றனர். 25 டிகிரி செல்ஷியஸுக்கு மேலும் இருக்கும் என்று சொல்லும் போது எத்தனை டிகிரி செல்ஷியஸ் வரை உயிர் வாழும் என்று அறுதியிட்டு சொல்ல வில்லை. இவ்வளவு கதை அளக்கும் அந்த அமைப்பு சென்ற டிசம்பரில் துவங்கிய கொரோனா வைரஸை ஏன் முன் கூட்டியே கண்டறிய முடியாமல் விட்டனர் என்பது இப்போதைய கேள்வி..
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202019:42:32 IST Report Abuse
ocean kadappa india கண் மூக்கு வாய் இதை கொசு கடித்தால் எப்படி தொடாமல் இருக்க முடியும். வைரஸுக்கு எதிர் வைரஸ்கள் உள்ளன. உலக சுகாதார அமைப்பு அதை ஆராயாமல் பொத்தாம் போக்காக அறிக்கை விடுகிறது. கொரோனா குளிர கால வைரஸ். அதற்கு எதிரி கோடை கால வைரஸாக இருக்க வேண்டும். கொரோனா வாடை பிடித்து ஒட்டுவது. அதற்கு உயிர் உள்ளது. அதை சாகடிக்க என்ன பண்ண வேண்டுமோ அதை சொல்லாமல் கையை கழுவு காலை கழுவு என்று சொல்ல நீ யார்.
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
06-ஏப்-202016:28:25 IST Report Abuse
kalyanasundaram MAKE PRAYER TO ALMIGHTY WITH UTMOST SINCERITY. HE ALONE WILL SOLVE.
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
07-ஏப்-202007:45:27 IST Report Abuse
K.Muthurajஇன்னுமாடா பூமி இதையெல்லாம் நம்புது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X