இஸ்ரேலில் ஒரே நகரில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

ஜெருசலேம்: இஸ்ரேலில், 2 லட்சம் பேர் வாழும் ஒரு நகரில், 40 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



latest tamil news





பழமைவாத யூத நகரம்

இஸ்ரேலில், தீவிர பழமைவாத யூத நகரமான நே பிரேக்கில், 2 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு, தற்போது, 40 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இஸ்ரேலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'இஸ்ரேலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், நே பிரேக்கில் அப்படியில்லை. அவர்கள் மூலமாக, கொரோனா தொற்று இஸ்ரேல் முழுவதும் பரவுபதை அனுமதிக்க முடியாது. அதனால், அந்நகரை முடக்குகிறோம்' என்றும் கூறினார்.


latest tamil news




இந்நிலையில் நேற்று, நே பிரேக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. நகரில் இருந்து மக்கள் வெளியேராமல் தடுக்க, நகரைச் சுற்றிலும் போலீசாரும் ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வெளியுலக தொடர்பு இல்லை!


நே பிரேக் நகரில் உள்ள மக்கள், கூட்டுக் குடும்பமாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மத நம்பிக்கை காரணமாக, இணையம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடும் இவர்கள் மத்தியில் குறைவாகத்தான் இருக்கிறது. வெளியுலகச் செய்திகள் மற்றும் தகவல்கள் பெரிதாக அவர்களை சென்று சேர்வதில்லை.


latest tamil news


இதனால், கொரோனா வைரசை பொருட்படுத்தாமலும், அனைவரும் கூடி பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். கொரோனா தொற்றை சாதாரணக் காய்ச்சலாகக் கருதுகின்றனர். முகக் கவசமும் அணிவதில்லை. மேலும், அரசின் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த நகரில் வாழ்பவர்கள் மீது, ஒட்டுமொத்த இஸ்ரேல் மக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
06-ஏப்-202018:40:27 IST Report Abuse
chander இஸ்ரயேலில் கொரோனா நல்ல வேடிக்கை
Rate this:
Cancel
06-ஏப்-202017:57:26 IST Report Abuse
ஆப்பு அங்கே ஒத்துமை கிடையாது. யாரும் விளக்கேத்த மாட்டாங்க.
Rate this:
Cancel
Venkatesh - bangalore,இந்தியா
06-ஏப்-202015:15:14 IST Report Abuse
Venkatesh மதம் புடிச்ச எல்லா மனுஷனுக்கும் இதுதான் கதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X