கொரோனாவை இந்தியர்கள் தோற்கடிப்பார்கள்: பிரதமர் மோடி பேச்சு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
BJP, PM Modi, CoronaVirus, Corona, Modi, Narendra Modi, covid 19, பிரதமர், மோடி, கொரோனா, வைரஸ், இந்தியர்கள், தோற்கடிப்பார்கள், பாஜ, பாஜக

புதுடில்லி: கொரோனா நோயை, இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து தோற்கடிப்பார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாஜ., கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் (ஏப்.,06) 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து கட்சியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடினார்.

அப்போது மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை உலகமே பாராட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது.


latest tamil news


கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா, அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளை ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக உணர்வுப்பூர்வமாக மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும். இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து கொரோனா நோயை தோற்கடிப்பார்கள்.

ஆரோக்ய சேது செயலியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி மக்களிடம் சொல்ல உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். குறைந்தது 40 பேர் இந்த செயலியை நிறுவுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தங்களைச் சுற்றியுள்ள நோய்த்தொற்று வழக்குகள் பற்றிய தகவல்களை செயலி மூலம் அவர்கள் பெறுவார்கள். இந்த கடினமான காலங்களில் இதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும் போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இன்று சமூக விலகல் மற்றும் ஒழுக்கம் என்பதே உலகம் முழுவதற்குமான மந்திரமாகும்.இவ்வாறு மோடி பேசினார்.


கொரோனா இல்லாத இந்தியா


முன்னதாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பா.ஜ.,வுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், சிறந்த நிர்வாகம் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிலேயே கட்சி கவனம் செலுத்தியது. கட்சியின் கொள்கைகளை பின்பற்றி, ஒவ்வொரு தொண்டரும், பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரவும், சிறந்த சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்.



கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராட்டம் நடத்தும் நிலையில், பா.ஜ.,வின் 40வது ஆண்டு தினம் வருகிறது. பா.ஜ., தலைவர் நட்டா வெளியிட்டுள்ள விதிமுறைகளை ஒவ்வொரு தொண்டரும் பின்பற்றுவதுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அப்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் இணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06-ஏப்-202021:00:31 IST Report Abuse
Sanny இந்தியாவிடம் அவன் உதவி கேட்டான் இவன் அவனிடம் இது கேட்கலாமா என்று இல்லாமல் பழமையை மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி மனிதனாக வாழுங்க என்றுதான் கடவுள் தந்த இந்த கொரோன என்ற பாடம், இனியாவது நான் நீ, ஜாதி மதபேதம் இல்லாமல் வாழுங்க, கொரோனா ஓடிவிடும். இந்தியாவில் கொரோன வியாதியால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை வர வர அதிகமாகுது, கட்சி சார்த்த வேலைகளையும், கட்ச்சியை வலுப்படுத்துவதையும் விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல் படுங்க. இங்கிலாந்து தலைவரின் உயிருக்கு கேள்வி குறி வந்துள்ளது. மேல்நாடுகளில் அந்த நாட்டு தலைவர்கள் இரவு பகலாக தொலைக்காட்ச்சியில் வந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அது அவர்களின் அன்றாட கடமை, அதுக்காக அவர்களின் புகழை மக்கள் பாடுவதில்லை.
Rate this:
Cancel
06-ஏப்-202019:53:35 IST Report Abuse
ஆப்பு //வீட்டுக்குள்ளே இருக்கும்போது கூட மாஸ்க் அணியுங்கள்// இவுரு எங்கே இருக்காரு? what a hypocrisy?
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
06-ஏப்-202018:26:26 IST Report Abuse
chander தலைவரே கொரோனவை மக்கள் கண்ணில் காட்டுங்க ஹிட் அடிச்சிரலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X