பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் வாங்க நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
corona, coronavirus, tamil nadu, eps, TN news, CM EPS, Palanisamy, coronavirus treatment,
 கொரோனா, கொரோனாவைரஸ், முதல்வர்இபிஎஸ், முதல்வர்எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி,  கலெக்டர்கள்,  அதிகாரிகள், ஆலோசனை,மக்கள்

சென்னை: கொரோனா பரிசோதனை செய்ய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அதில் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


latest tamil news



இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனாவை தடுப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழகத்தில், அரசு சார்பில் 18 மற்றும் தனியார் சார்பில் 6 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான அனுமதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என நம்புகிறோம்.

தமிழகத்தில் 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசிடம் தேவையான மாஸ்க்குகள், மற்றும் பாதுகாப்பு கவசங்கள் கையிருப்பில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன.கூடுதலாக 2 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. ஒரு லட்சம் கருவிகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்., 9ம் தேதி இந்த கருவிகள் வந்த உடனே, கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


latest tamil news




144 தடை உத்தரவை மீறியதாக 94, 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 94,152 பேர் கைதாகி ஜாமினில் வந்துள்ளனர். 72,242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசிடம் இருந்து முதல்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில் உள்ளது. மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் அல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நோயின்தன்மை, வீரியத்தை உணர்ந்து மக்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு விரைவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நடமாடும் காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களாகவே தெரிவிப்பது நல்லது. ஏப்.,14க்கு பிறகு, கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
06-ஏப்-202019:39:00 IST Report Abuse
Ray இப்படியொரு கருவியை கண்டு பிடிக்கும் திறமையான புத்திசாலிகளோ வெகு விரைவாக அவற்றை தயாரிக்கும் வல்லமை பெற்ற நிறுவனங்களோ தொழிலாளர்களோ நம்மிடம் இல்லையா? ஏன் இந்த நிலைமை? தோசை மாவு வாங்கி ஆப்ப கடை வைக்க மட்டும்தானா நாம்?
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-202018:34:42 IST Report Abuse
Tamilan உலகிலுள்ள குப்பைகளையெல்லாம் வாங்கியதால், இருப்பது எல்லாவற்றையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது .
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
06-ஏப்-202017:50:43 IST Report Abuse
kumzi ஐயா இந்த மூர்க்கனுங்கள அடக்காமல் எந்த விதமான கருவிகளை வாங்கியும் பிரயோசனம் இல்லைய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X