கொரோனா பாதித்தவர்களை காக்க பிரான்ஸில் மருந்து

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாரீஸ்: ஆரம்ப கட்ட கொரோனா தாக்கத்தைக் கட்டிப்படுத்த ஹைட்ரோ குளோரோகுவீன் சிகிச்சை பலன் தருமென பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். கடந்த சனியன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிலையம் இரு மலேரியாவுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடித்தது. ஹைட்ரோ குளோரோ குவின் மற்றும் குளோரோ குவீன்
corona, coronavirus, medicine, france, coronavirus death, coronavirus treatment, கொரோனாவைரஸ், பிரான்ஸ், மருந்து,

பாரீஸ்: ஆரம்ப கட்ட கொரோனா தாக்கத்தைக் கட்டிப்படுத்த ஹைட்ரோ குளோரோகுவீன் சிகிச்சை பலன் தருமென பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். கடந்த சனியன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிலையம் இரு மலேரியாவுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடித்தது. ஹைட்ரோ குளோரோ குவின் மற்றும் குளோரோ குவீன் ஆகிய இந்த இரு மருந்துகளும் கொரோனாவை சரி செய்ய உதவும். இந்த இரு மருந்துகளையும் 'கேம் சேஞ்சர்கள்' என அமெரிக்க அதிபர் அழைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஓர் பிரஞ்சு இதழில் ஹட்ரோ குளோரோ குவீன் கொரோனா வைரஸை போக்க உதவாது என கூறப்பட்டது. ஹைட்ரோ குளோரோ குவின் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகளின் கலவை மிதமான கொரோனா பாதிப்புடைய நபர்களுக்கு மருந்தாக அமையுமென சீனா மற்றும் பிரான்சின் உள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சில மருத்துவர்களின் கூற்றுப்படி ஹைட்ரோ குளோரோ குவின் மருந்து கலவை கொரோனா வைரஸ் தாக்கத்தை நோயாளியின் உடலில் இருந்து முற்றிலும் அழிக்காமல் குணமாவது போல காட்டும். இதனால் கொரோனா வைரஸ் உடலில் இருந்து நீங்கி விட்டது என நம்பி பலர் வீடு திரும்புவர். இது மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்பும். இது ஆபத்தானது என்றுள்ளனர்.


latest tamil news
பிரான்சில் கடந்த மார்ச் 17 அன்று கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் கொண்ட 80 பேருக்கு ஹைட்ரோ குளோரோ குவீன் செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இவர்களது உடலில் இந்த மருந்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதாக முடிவுகள் வெளியானது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் இவர்களின் உடலில் ஆரம்ப நிலையிலேயே இருந்துள்ளது. வறட்டு இருமல், மிதமான காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டன. ஆக, இந்த மருந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவிட்ட நோயாளிகளுக்கு பயன்படாது என பிரான்ஸ் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்படாத நிலையில், குறைந்தபட்சம், கொரோனா தாக்கம் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து உதவும் எனப்படுகிறது. இந்த விஷயம் ஆரம்ப அறிகுறிகள் கொண்டவர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202021:35:56 IST Report Abuse
ocean kadappa india பாய் கருஞ்சீரகம் நோய் நிவாரணியாக இருந்தாலும் அதை தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். தேன் நல்ல மருந்து. நாலைந்து குங்கும பூ க்களை வெந்நீர் அல்லது காய்ச்சிய பாலில் கலந்து இரவு வேளைகளில் படுக்கு முன் குடித்து விட்டு படுத்தால் காலையில் கொரோனா பாதிப்பிருக்காது. மூச்சு நன்றாக விட முடியும் இருமல் சளி என எதுவும் இருக்காது. இதை எங்கள் சித்தர்கள் சொல்லி உள்ளனர்.
Rate this:
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
06-ஏப்-202020:14:11 IST Report Abuse
தங்கவேல்  ஷண்முகம் சார் தினமலரின் "நலம்" பகுதியில் பாருங்கள். s://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38172&print=1
Rate this:
Cancel
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
06-ஏப்-202017:59:19 IST Report Abuse
moodi masthan beembai இந்தியால ஒரு கூட்டம் மாமூ வ குடிச்சிட்டு எனக்கு எதுவும் வராதுன்னு மல்லாந்து படுத்துகிட்டு மணியடிக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X