பணம் ஒரு பிரச்னையில்லை: காம்பீருக்கு கெஜ்ரி பதில்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
CoronaVirus, Funds, Arvind Kejriwal, Gautam Gambhir, Delhi, corona, kejriwal latest news, PPE kits,PPE kits India

புதுடில்லி: டில்லி அரசுக்கு கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்த பாஜ., எம்பி., கவுதம் காம்பீருக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கையில், பணம் ஒரு பிரச்னையில்லை, பரிசோதனை கிட்கள் தான் பிரச்னை என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கும்படி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், மாநிலங்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுகொண்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜ., எம்பி.,யுமான கவுதம் காம்பீர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டில்லி அரசுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கியிருப்பதாக கூறி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


latest tamil news


அந்த கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை. இருப்பினும், அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மேலும் ரூ.50 லட்சத்தை தருகிறேன். இந்த ஒரு கோடி ரூபாய் குறைந்தபட்சம் மாஸ்க்குகள், மருத்துவ உபகரணங்களின் அவசர தேவைகளை தீர்க்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ‛நன்றி கவுதம் ஜி, பணம் ஒரு பிரச்னையில்லை. பரிசோதனை கிட்கள் தான் பிரச்னை. உடனடியாக எங்கிருந்தோ அவற்றைப் பெற நீங்கள் எங்களுக்கு உதவ முடிந்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். டில்லி அரசு அவற்றை வாங்கும். நன்றி,' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
06-ஏப்-202022:56:57 IST Report Abuse
nagendirank காம்பிர் ஒன்றும் தனது சொந்த பணத்தை வழங்க வில்லை . அரசாங்க பணமான தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுத்துள்ளார். இது எல்லாம் ஒரு செய்தி .
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
06-ஏப்-202019:17:32 IST Report Abuse
K.Sugavanam பணத்திற்கு பதில் பரிசோதனை kit கள் காம்பிர் வழங்கி இருக்கலாமே..
Rate this:
raguraman venkat - Madurai,இந்தியா
06-ஏப்-202020:46:56 IST Report Abuse
raguraman venkatபிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி என்று இடர்பாடு சமயங்களில் மக்கள் பணத்தை அரசுக்கு வழங்குவார்கள். காரணம், தேவையான பொருட்களை அரசு வேகமாக கொள்முதல் செய்யும். பொருட்களின் தரத்திற்கும் அரசே பொறுப்பு. நாம் பொருளாக கொடுப்பதற்கு நிறைய காலவிரயம் ஆகும். அவசரத்திற்கு பணஉதவி செய்தல் அரசாங்கம் வேண்டிய பொருட்களை வாங்க முடியும். கம்பிர் பிஜேபி என்பதால் விஷம் கக்கி இருக்கிறீர்கள். Getting older and getting wiser are completely different things என்று உங்கள் கருத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்....
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
06-ஏப்-202018:27:00 IST Report Abuse
Kundalakesi Delhi budget is not a deficit budget. Through various measures the income is above expenses. Just with money they can't cover face. They need products. Kejri should use all possible resources to produce the required masks and equipment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X