பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்தவர்களில் 76% பேர் ஆண்கள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Coronavirus, covid-19, corona update, corona in India,  Male-Female ratio, health ministry, fight against corona, coronavirus in India, covid-19 in India, கொரோனா, வைரஸ், இந்தியா, ஆண்கள், பெண்கள், லாவ் அகர்வால்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஏப்.,05) மட்டும் 30 பேர் பலியாகியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இறப்புகளில் 63 சதவீதம் பேர் பதிவாகியுள்ளன, அதே சமயம் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் இறந்துள்ளனர். 7 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள். மொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருக்கின்றனர்.


latest tamil news



ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

ஊரடங்கு நடைமுறையில் உள்ள கடந்த 13 நாட்களில், இந்திய ரயில்வே 1340 பெட்டிகள் வழியாக சர்க்கரையும், 958 பெட்டிகள் மூலம் உப்பும், 316 பெட்டிகளில் எண்ணெயும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் இப்போது வரை 16.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 13 மாநிலங்களில் 1.3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் எட்டு மாநிலங்களில் 1.32 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா நேர்மறை வழக்குகள் அல்லது நோயாளிகளிடம் அதிக ஆபத்துள்ள தொடர்புகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-202023:07:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.// மருத்துவ சோதனைகள் இல்லாமல் இதை திணிப்பதன் கட்டாயம் என்ன? அமெரிக்க ஜோக்கர் டிரம்பு உளறுவதால் தானே? அவனுடைய அரசிலேயே மருத்துவ அதிகாரிகள் இந்த நடைமுறையை வன்மையாக எதிர்க்கிறார்கள். இந்தியாவில் இதை செயல்படுத்த இந்த கிராதாகன் தி டம்ப்பு சொல்வதற்கான காரணம் ஒண்ணே ஒன்னு தான். இந்திய உயிர்களை அவன் பரிசோதனை எலிகளாக்கும் முயற்சி தான். மோசடி தர்பார் இதற்கு உடந்தையாக இருப்பது அந்த மாத்திரை மோடியின் ஆப்த கார்ப்பரேட் பெருமுதலாளி சன் பார்மசூட்டிகல் நிறுவனம் தயாரிப்பதால் தான்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-202023:01:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொண்டாட்டியால் பாதிக்கப்பட்ட ஆண்களும் கிட்டத்தட்ட அதே சதவீதம் தான் வருகிறது. அப்போ சார் என்ன சொல்ல வர்றாரு? பெண்கள் கொரோனா வைரஸ் மாதிரி என்கிறாரா?
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஏப்-202021:15:26 IST Report Abuse
ocean kadappa india வெளி வட்டார்ங்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் நடமாடுவார்கள். அதனால் அவர்கள் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X