சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் கமல் கூறியுள்ளதாவது: இந்த கடிதத்தை பொறுப்புள்ள குடிமகனாகவும் , அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிற்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.
இந்த நெருக்கடியான காலத்தில், 140 கோடி கோடி மக்கள், இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகின்றனர்.ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால், அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை.
நீங்கள் சொன்னால் செய்கிறார்கள் கொரோனாவை ஒழிக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.ஏழைகள், முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் துயரை துடைக்க உங்களை தவிர வேறு யாரும் இல்லை. பணமதிப்பிழப்பு போல் நீங்கள் மீண்டும் ஒரு ஊரடங்கு தவறை செய்துள்ளீர்கள்.
ஒரு பக்கம் அனைவரையும் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். மறுபக்கம் ஏழைகள் தங்களின் இயலாதனத்தை எண்ணி வருந்துகிறார்கள். பால்கனியில் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டு கொண்டிருந்த நிலையில், ஏழைகளோ அடுத்த வேளை உணவான சப்பாத்திக்கு செய்ய போதுமான எண்ணெய் இல்லாமல் போராடுகிறார்கள்.

கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள் . இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
My open letter to the Honourable Prime Minister @PMOIndia @narendramodi pic.twitter.com/EmCnOybSCK
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2020
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement