பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 621, பலி: 6 ஆக உயர்வு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6 ஆனது.சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 91,851 பேர்அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 205 பேர்1,475 பேருக்கு பரிசோதனை
TN, CoronaVirus, BeelaRajesh, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, பலி, உயர்வு, பீலா ராஜேஷ்

சென்னை : தமிழகத்தில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6 ஆனது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :
வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 91,851 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 205 பேர்
1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது. இன்று மட்டும் 50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 48 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




மாவட்ட வாரியாக

தமிழகத்தில் மொத்தம் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், கோயம்புத்தூரில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து,
திண்டுக்கல்-45,
திருநெல்வேலி-38,
ஈரோடு-32,
திருச்சி-30,
நாமக்கல்-28,
ராணிப்பேட்டை-25,
செங்கல்பட்டு-24,
கரூர்-23,
தேனி-23,
மதுரை-19,
விழுப்புரம்-16,
கடலூர்-13,
சேலம், திருவள்ளூர், திருவாரூரில் தலா-12,
திருப்பத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டிணமில் தலா-11,
திருவண்ணாமலை-9,
தஞ்சாவூர்-8,
திருப்பூர்-7,
கன்னியாகுமரி, காஞ்சிபுரத்தில் தலா-6,
சிவகங்கை, வேலூரில் தலா-5,
நீலகிரி-4,
ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா-2,
அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



6 பேர் உயிரிழப்பு


இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று, தேனி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202019:03:15 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) எச்சரிக்கை எச்சரிக்கை கொரோனாவிற்கு எச்சரிக்கை
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
07-ஏப்-202017:20:58 IST Report Abuse
unmaitamil கொரோனாவால் இறந்தவர்கள் எல்லோரும் மூர்க்கன் கூட்டம். தமிழ்நாட்டில் இத்தனை பேர் பாதிக்க பட்டதும் இவர்களால்தான். இப்படி இருந்தும் இவர்களை கண்டித்து சுடலையோ, குருமாவோ, ஓசி மாட்டுக்கறி மைந்தனோ, காந்திகளோ, சைக்கோவோ ஒருவார்த்தை பேசாமல் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டிருப்பது இவர்களது ஓட்டுக்கு பயந்து மட்டும் அல்ல. இவர்களின் மூர்க்கமான செயலுக்கும் பயந்துதான். இந்த மூர்க்க கூட்டத்தையும், அவர்களை வளர்த்த கட்சிகளுக்கு மொத்தமாக கண்மூடித்தனமாக ஓட்டுப்போட்டு மக்களுக்கு இவர்கள் நல்ல தண்டனை கொடுத்து விட்டனர். விரைவில் தமிழ்நாட்டை கொரோனாவின் முதல் மாநிலமாக ஆக்கிய பெருமையை பெற்று தருவர். இனியாவது தமிழ் மக்களுக்கு அறிவு கண் திறக்கட்டும். மூர்க்க கூட்டத்தை ஆதரிக்கும் காட்சிகளை இல்லாது துடைத்து எறியட்டும்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
07-ஏப்-202015:56:56 IST Report Abuse
chander இறப்பவர்களுக்கு முக்கிய காரணம் அரசுதான் தமிழக சித்தர்கள் மருந்து கொடுத்து காப்பாற்ற விடாமல் அரசு தடுக்கிறது ஆங்கில மருந்துகளை தடை செய்து உண்மையான இந்திய தலைவர்கள் என்றால் இந்திய மருந்துகளை அனுமதிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X