கொரோனா ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பங்குபெறாத நடிகர்கள்| Many celebrities did not unite to spread awareness on covid-19 | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பங்குபெறாத நடிகர்கள்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (84)
Share
சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நேற்று(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.இதனை ஏற்று, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி தலைவர் மற்றும் வட மாநில தலைவர்கள் விளக்கு ஏற்றினர்.பிரதமரின்

சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நேற்று(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.latest tamil newsஇதனை ஏற்று, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி தலைவர் மற்றும் வட மாநில தலைவர்கள் விளக்கு ஏற்றினர்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி, ராகவா லாரன்ஸ், தமன்னா, நயன்தாரா, ஆர்த்தி, கணேஷ், சவுந்தர்யா ரஜினி, பிரபு, சூரி, அருண் விஜய், ராஷி கண்ணா, கவுதமி, விஜயகாந்த், ராதிகா, சரத்குமார், சஞ்சனா சிங், ஆத்மிகா, அம்ரிதா, நந்திதா, பூஜா ஹெக்டே, டாப்சி, ஹன்சிகா, பார்வதி நாயர், சோனியா அகர்வால், ரம்யா பாண்டியன், ரோபோ சங்கர், ஸ்ரேயா, பாடகி சித்ரா, அர்ஜுன். உள்ளிட்ட நடிகர் நடிகைகள் விளக்கு ஏற்றினர். அதேபோல், அமிதாப், அக்ஷய் குமார், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், மகேஷ்பாபு, நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், கரண் ஜோகர், கங்கனா, கரீஷ்மா கபூர், லதா மங்கேஷ்கர், ரித்தேஷ், ஜெனிலியா, அனுபம் கெர், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் விளக்கேற்றினர்.


விளக்கு ஏற்றாத நடிகர்கள்


ஆனால், இந்திய மக்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், ஆர்யா, சாயிஷா, த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர், ரஹ்மான், இமான், யுவன் ஷங்கர் ராஜா, அட்லீ, முருகதாஸ், கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் விளக்கு ஏற்றவில்லை.


latest tamil news
பிரதமர் வேண்டுகோளை ஏற்று, எதிர்க்கட்சி தலைவர்கள் விளக்கேற்றினர். இது ஒற்றுமையை காட்டியதுடன், கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்காகவாவது நடிகர்கள் விளக்கேற்றி இருக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X