பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் 28 சதவீத சொத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

மும்பை: கொரோனாவால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பில் 28 சதவீதம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


latest tamil news



அதாவது பங்குச்சந்தையில், கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட சரிவால் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் (ரூ 23,000 கோடி) சரிந்து 48,000 கோடி டாலர்களாக (ரூ.36.54 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய கடந்த 2 மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19,000 கோடி டாலர் குறைந்ததால், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9-வது இடத்திலிருந்து 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஏப்-202009:51:22 IST Report Abuse
 Muruga Vel சொத்து குறைந்தால் சம்பாதித்து கொள்ளலாம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஏப்-202009:52:25 IST Report Abuse
Sampath Kumar பூ இம்புட்டு தான ? நல்லவலில் வந்தால் நிலைக்கும் இது அப்படி அல்ல ஆண்டவன் எல்லாத்தையும் பாத்து கொண்டுதான் உள்ளான் .உரியவர்களுக்கு தண்டனை கொடுப்பான் .இன்று உலகம் முழுவதும் எது தான் நடக்குது
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
08-ஏப்-202007:04:04 IST Report Abuse
Raja கட்டுமரம் குடும்ப சொத்தின் நிலை எப்படி உள்ளது. அது மட்டும் கொஞ்சம் கூட குறைஞ்சிருக்காதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X