பொது செய்தி

தமிழ்நாடு

50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவை! மத்திய அரசு கணிப்பு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என மத்திய அரசு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல், கொரோனாவை எதிர்கொள்ளுவதற்காக நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் தலைமையில், சர்வதேச அமைப்புகள், தொண்டு
ventilator, mask, corona, coronavirus, india, government, government of India, Indian government, fight against corona, corona update, அரசு, வென்டிலேட்டர்கள், முகமுடி, மாஸ்க், கொரோனாவைரஸ், கொரோனா

புதுடில்லி : கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என மத்திய அரசு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல், கொரோனாவை எதிர்கொள்ளுவதற்காக நிடி ஆயோக் சி.இ.ஓ., அமிதாப் காந்த் தலைமையில், சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிர்வாகிகள் அடங்கிய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும். அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டது. ஜூன் மாதத்திற்குள் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 16 ஆயிரம் உள்ளது. எஞ்சிய 34 ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் துவக்கியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news



கடந்த மார்ச் மாதம், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சைக்கான மாஸ்க்குகள், அதனை தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202020:08:54 IST Report Abuse
அன்பு அய்யோ. இப்பதான் யோசிக்கறாங்களா!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X