பாக்., பயங்கரவாதிகளை கொன்று 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Kupwara encounter,5 soldiers died, 5 terrorist killed, Jammu and Kashmir news, J&K news, India, Pakistan, Indian Army, special force, பாகிஸ்தான்,வீரமரணம்

ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பாக்., பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள், 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் அதிக பனி பொழிந்து வருவதால், அதனை பயன்படுத்தி நவீன ஆயுதங்களுடன், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர், கண்காணிப்பு பணியிலிருந்த ராணுவத்தினர் 5 பைகளை கடந்த 1ம் தேதி கண்டறிந்தனர். இதனையடுத்து ராணுவ முகாம்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.


latest tamil newsஇதனைதொடர்ந்து, ஏப்.,3ல் பயங்கரவாதிகளின் காலடி தடம் கண்டறியப்பட்டது. ட்ரோன்கள் மூலமும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பனிப்பாறையில் நின்று ராணுவ வீரர்கள் கண்காணித்த போது, பாறை உடைந்து கீழே விழுந்தது. அங்கிருந்த நீரோடையில் பயங்கரவாதிகள் இருந்ததை கண்ட ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இருதரப்பினரும் நேருக்கு நேராக மோதியதில் பாக்., பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், இந்திய ராணுவ வீரர்கள் பால கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங், ஹவில்தார் தேவேந்திர சிங் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய 5 பேரும் வீரமரணம் அடைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202002:49:58 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அடுத்த சர்ஜிக்கல் தாக்குதலுக்கு நேரம் நெருங்குகிறது.
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
07-ஏப்-202001:09:45 IST Report Abuse
Anbu Tamilan Respect the country and our Military force. We should stand together for them unitedly. JAI HIND. Avoid & punish all DMK, CONG, VC, VAIKO, VCOMMUNIST, KAMAL, SEEMAN, DIDI ETC
Rate this:
Cancel
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
06-ஏப்-202023:37:50 IST Report Abuse
பேப்பர்காரன் வீர மரணம் அடைந்த நம் வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . 50000 பக்கிகள் கோரான வந்து சாகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X