பொது செய்தி

இந்தியா

கொரோனா: நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் ரத்து

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: நாடுமுழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நடைபெற இருந்த அனைத்து பயிற்சி முகாம்களும் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்தநிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நடைபெற இருந்த அனைத்து பயிற்சி முகாம்களும் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை 3 மாதங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தனது ஊழியர்கள், தொண்டர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
07-ஏப்-202004:33:48 IST Report Abuse
blocked user கஷ்ட காலத்தில் வெளியே வந்து உதவுவது என்பது மிகப்பெரிய விஷயம். அதை பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
07-ஏப்-202002:53:56 IST Report Abuse
Arasu அப்ப அப்ப சில உதவிகளை செய்வது
Rate this:
Cancel
06-ஏப்-202023:17:33 IST Report Abuse
பரத் வாசர் ரிஷ்ய சிருங்கர் இவனுங்கல் ரொம்ப மோசம்...கொரோனாவே தேவலாம்...அடுத்த மதத்தை குறை சொல்ற இந்த ஆளுங்கதான் நிஜமாலுமே நம் நாட்டுக்கு முத்த எதிரி. இந்த மாதிரி அமைப்புகளை தடை செய்யணும் எந்த மத, ஜாதி பார்க்காமல். எல்லா ஜாதி காட்சிகளையும் உடனே தடை செய்யணும்.. மத பேரில் உள்ள காட்சிகளை தடை செய்யணும். கட்சி பேரை வைத்து இந்த கட்சி இந்த ஜாதி அல்லது மதம் என்று இருக்கப்படாது. குறிப்பிட்ட ஜாதிக்கு வக்காலத்து வாங்கும் எல்லா தலைவர்களையும் குண்டர் சட்டத்தில் போட்டால் நாடு நல்ல பாதையில் போக வாய்ப்பிருக்கு..இல்லையேல்..காரோண நம்மளை முழுசா முழுங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X