இத்தாலி நோயாளிகளுக்கு நம்பிக்கை தந்த ஜெர்மனி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பெர்லின் : கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஜெர்மனி தொற்றிலிருந்த விடுபட்டுள்ளது. இதையொட்டி அதிக பாதிப்பு உள்ள இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா அதிகமாக பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இத்தாலியில் சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து பலி மற்றும் பாதிப்பு குறைந்து வந்ததாக தகவல்களும் வெளியாகின. தொடர்ந்து, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஊரடங்கு, தகுந்த தொழில்நுட்பத்தால் சிகிச்சை முறை போன்றவற்றால் சீனா , ஜெர்மனி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தது.


latest tamil news



தொடர்ந்து, இத்தாலியில் அதிகமாக பாதிப்புக்குள்ளான 6 நோயாளிகளை வட இத்தாலியின் பெர்கமோவிலிருந்து ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டுக்கு கொண்டு வந்து உதவி செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதியில் தான் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய இடமில்லை. ஜெர்மனியில் கொரோனா விகிதம் 1.4 சதவீதமாக இருந்தது. இது இத்தாலியில் 12 சதவீதமாகவும், ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் 10 சதவீதமாகவும் சீனாவில் 4 சதவீதம், அமெரிக்காவில் 2.5 சதவீதமாக இருந்தது. மேலும் கொரோனா விகிதத்தை சரிபாதியாக குறைத்ததில் தென் கொரியாவின் சாதனை மகத்தானது. ஆனால் தென்கொரியாவிலும் 1.7 சதவீதமாக இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் ஜெர்மனி இந்த பிரச்சினையை நன்கு கையாண்டுள்ளது.


latest tamil news



ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு குறைவான அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். மேலும் தொடர்பு டிரேசிங், தீவிர சிகிச்சை முறை, உயர்ந்த தொழில்நுட்பம், நம்பகமான அரசு மற்றும் சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் போன்றவையும் ஜெர்மனியின் வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
07-ஏப்-202001:35:23 IST Report Abuse
Murthy ஒரு நாளைக்கு ஒரு லக்சம் முதல் இரண்டு லக்சம் வரை பரிசோதனை நடத்துகிறார்கள், இன்று மிகப்பெரிய திருப்புமுனையாக இரண்டாயிரத்திக்கும் குறைவாக பாதிக்கப்படுவோர் பதிவாகி உள்ளது. மற்ற நாடுகளுக்கு மிக பெரிய உதாரணமாக ஜெர்மனி உள்ளது.
Rate this:
Cancel
Narayanan Thannappa - Canton,Detroit,யூ.எஸ்.ஏ
06-ஏப்-202021:43:30 IST Report Abuse
Narayanan Thannappa பொறுப்பற்ற மக்களே இத்தாலியின் இந்த அவலத்திற்கு காரணம்.உலகுஅறியும்.நீரும் அறிவீராக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X