சமூக விலகலை கடைபிடிக்க கோர்ட்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | Corona: SC orders courts to follow social distancing norms during hearings | Dinamalar

சமூக விலகலை கடைபிடிக்க கோர்ட்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020
Share
corona, coronavirus, covid-19, SC, social distancing, fight against corona, corona update,

புதுடில்லி :'வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கூடுவதை தடுக்க, 'வீடியோன கான்பரன்ஸ்' வாயிலாகவே, அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள், சந்திரசூட், நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கொரோனா பரவலை தடுக்க, நீதிமன்றங்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். முக்கிய வழக்குகளின் விசாரணையை மட்டும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்த வேண்டும். மனுதாரர்களுக்கு, அந்த வசதியில்லாவிட்டால், அதை செய்து தர வேணடும். வீடியோ கான்பரன்ஸ் வழியாக, சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய கூடாது.


latest tamil news
சாட்சியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிபதி, சமூக விலக்கலை கடைப்பிடித்து, சாட்சியிடம் விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், விசாரணையை ஒத்திவைக்க, நீதிபதிகளுக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.உச்ச நீதிமன்றம், மிக முக்கியமான வழக்குகளை மட்டும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, கடந்த, 25ம் தேதி முதல், விசாரித்து வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X