சீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே? கமலை விமர்சித்த காயத்ரி

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (195) | |
Advertisement
சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கமலை, பா.ஜ.,வை சேர்ந்த காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கமல் கடிதம் எழுதினார். அதில் 'எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு
Gayathri Raghuram, Kamal Haasan, PM Modi, letter to Modi, covid-19, coronavirus, corona, fight against corona,  கமல்,காயத்ரிரகுராம்,பிரதமர்,மோடி

சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கமலை, பா.ஜ.,வை சேர்ந்த காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கமல் கடிதம் எழுதினார். அதில் 'எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள் .' என பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கடிதம் எழுதினார்.


latest tamil news

கடும் தாக்கு:


இதனை விமர்சித்து பா.ஜ.,வை சேர்ந்த காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.


latest tamil news

இது ஒரு டிரெண்ட்:


பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Murugan - Chennai,இந்தியா
11-ஏப்-202022:33:23 IST Report Abuse
K. Murugan உலக நாயகன் கமலுக்கு ஏற்கனவே புத்தி பேதலித்து போயிருந்தது. இப்பொழுது அது மேலும் அதிகரித்து பைத்தியமாகிவிட்டது. சினிமா துறையில் கிடைத்த நல்ல பெயரை அரசியலில் கெடுத்து வருகிறார். தமிழ் மக்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல் பெருந்தலைவர்களையே வாக்கு வங்கியால் தோற்கடித்தவர்கள். தமிழ் மக்கள் இந்த கமலுக்கு தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
10-ஏப்-202018:27:41 IST Report Abuse
sankar விசமத்தனமான கருத்துகளை விதைத்து - பிரதமரை அவதூறு செய்யும் இந்த நபர் - கைது செய்யப்பட்டு கவனிக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறேன் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுங்கள்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
10-ஏப்-202017:59:05 IST Report Abuse
sankar பிரதமரை பற்றிய அவதூறுகள் நிறைய எழுதி இருக்கிறான் இந்த கயவன் - இவனிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து ஒதுங்கி நில்லுங்கள் உண்மையான தேசாபிமானிகளே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X