பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் தங்கம் இறக்குமதி 73 % சரிந்தது!

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு தேவை குறைந்ததால், இந்தியாவின் தங்க இறக்குமதி மார்ச் மாதத்தில் 73 % சரிவடைந்ததுடன், ஆறரை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.



latest tamil news



உலகளவில் தங்கம் பயன்படுத்துவதில் 2வது மிகப்பெரிய நாடான இந்தியாவிற்கு இறக்குமதி குறைந்ததால் , சர்வதேச அளவில் தங்கம் விலை கட்டுப்பாட்டில் இருக்கும். இது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதோடு, ரூபாய் மதிப்பு நிலையாக இருக்க உதவும்.மார்ச் மாதத்தில் இந்தியா 25 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 93.24 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுகையில், மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 63 % அளவுக்கு சரிந்துள்ளது. இதன் மதிப்பு 1.22 பில்லியன் டாலர் ஆகும்.

மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரம் வரை தங்கத்தின் தேவை மிதமானதாக இருந்துள்ளது. ஆனால் திடீரென தங்கத்தின் விலை அதிகரிக்கவே, அதன் தேவை குறைந்து போனதாக மும்பையை சேர்ந்த தனியார் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் 10 கிராம் எடை கொண்ட தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ.44 ஆயிரத்து 961 ஐ தொட்டது.


latest tamil news



கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி, ஏப்.14 வரை 3 வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்ததை தொடர்ந்து தங்கம் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நகைக்கடைகளும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டன. இதனால் தங்கத்தின் தேவை குறையவே, டீலர்கள் தங்கம் விலையில் ஒரு அவுன்ஸ்க்கு 48 டாலர் அளவுக்கு தள்ளுபடி அளித்தனர். உள்நாட்டு விலை என்பது 12.5 % இறக்குமதி வரி மற்றும் 3 % விற்பனை வரி உள்ளடக்கியது ஆகும். ஊரடங்கு அமலானதுக்கு பின் தங்கத்தின் தேவையில் புதிய மாற்றம் ஏற்படவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முதலில் கவனம் செலுத்தினார்கள் என மும்பை ரிடிசித்தி புல்லியன்ஸின் டீலர் இயக்குனர் முகேஷ் கோத்தாரி கூறுகிறார்.

ஒருவேளை ஏப்ரல் மத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இந்தியாவின் தங்க இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் 5 டன்னுக்கு கீழ் வீழ்ச்சியடையுமென மும்பையை சேர்ந்த தங்க இறக்குமதி நிறுவனம் கணித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 110.18 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
07-ஏப்-202010:14:21 IST Report Abuse
Sundar This should be continued.
Rate this:
Cancel
07-ஏப்-202009:39:31 IST Report Abuse
ஆரூர் ரங் விமானமில்லாமல் கடத்தலுக்கு வழியில்லை.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-ஏப்-202008:41:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தங்கம் விற்பனை இல்லை. நகை கடைகள் மூடியிருக்கின்றது. இருந்தபோதிலும் தங்கம் கிராமிற்கு நாலாயிரத்தை தாண்டி விட்டது. இந்தியாவில் தங்கத்தின் விலையை நமது அரசாங்கம்தான் நிர்ணயிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X