பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு: பதிவிறக்கத்தில் டிக்டாக் முதலிடம், வாட்ஸ் ஆப்- 2-ம் இடம்

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : ஊரடங்கின் போது அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகளில் டிக்டாக்கிற்கு முதலிடமும் , வாட்ஸ் ஆப்பிற்கு இரண்டாம் இடமும் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பொழுது போக்குவதற்கு சிரமம் அடைந்தனர். இதனிடையே தங்களின் செல் போன் மூலம் பல்வேறு தரவுகளை பதிவிறக்கம் செய்து வந்துள்ளனர். இது குறித்து பயன்பாட்டு ஆய்வாளர் நிறுவனமான ஆப் அனி விடுத்துள்ள செய்தியில் கூறிஇருப்பதாவது:

வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக் நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் இரண்டாம் இடத்திலும் , பேஸ் புக் மூன்றாம் இடத்திலும், ஹலோ நான்காம் இடத்திலும், இன்ஸ்டாகிராம் ஐந்தாம் இடத்திலும், விமேட் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டன.


latest tamil news



இவை தவிர ஆஜ்தாக், ஜூம் கிளவுட் சந்திப்புகள், யுவிடியோ, இன்ஸ்டாகிராம், ஜியோ டிவி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டன. கடந்த ஜனவரி மாதத்தில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை ஒப்படும் போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரையில் (அதாவது 49 மில்லியன் பதிவிறக்கங்கள்) அதிகரித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
susi - ,
06-ஏப்-202023:58:11 IST Report Abuse
susi இதில் என்ன கொடுமைனா இந்த Tik-Talk க்கும் சீனாகாரனுதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X