அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்காவை பார்த்து திருந்துவோம்: ராமதாஸ்

Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
 அமெரிக்காவை பார்த்து திருந்துவோம்: ராமதாஸ்

சென்னை : 'ஊரடங்கை அலட்சியப்படுத்தியதால், அமெரிக்கா மிகப்பெரிய பேரழிவை சந்திக்கிறது; எனவே, ஊரடங்கை கடைப்பிடியுங்கள்' என, பொதுமக்களை, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனி மனித சுதந்திரம் என, அனைத்திலும், அமெரிக்கா ஒரு கனவு தேசம். ஆனால், உலகில் அனைத்து நாடுகளும், ஒரு விஷயத்தில், 'நாம் அமெரிக்கா ஆகிவிடக் கூடாது' என, நடுங்கிக் கொண்டு இருக்கின்றன. அது, கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் தான்.தன் பரம்பரை எதிரி ரஷ்யாவிடமிருந்து கூட, முக கவசங்கள், மருந்து பொருட்களை, அமெரிக்கா உதவியாக பெற்றிருக்கிறது. கொரோனாவை தடுக்க, உலக நாடுகளிடம், அமெரிக்கா மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கு பிறப்பித்தால், வணிகம் பாதிக்கப்பட்டு விடும் என்று கருதியதாலும், 20 நாட்கள் அலட்சியமாக இருந்தாலும், அமெரிக்கா இன்று மிகப்பெரிய பேரிழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே, இந்த நிலை என்றால், இந்தியா, சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால், அதனால், ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்.எனவே தான் சொல்கிறேன்; ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள். சில விஷயங்களை தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில், இந்தியா கொரோனா வைரசை வெற்றி கொள்ளும்; நாடு நலம் பெறும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
08-ஏப்-202000:18:13 IST Report Abuse
துயில் விரும்பி என்ன சின்ன மாங்காவும் பெரிய மாங்காவும் உண்டியல் குலுங்குது...இந்த ரெண்டு மருத்துவர்கள் ஏன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்கலாமே குறைந்தது தனகாசலம் போல் சில மருந்துகளையாவது பரிந்துரைக்கலாமே. ரெண்டு மாங்காவும் அரசியல் செய்து கல்லா கட்ட மட்டும் தான் தெரியுமோ.
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
07-ஏப்-202018:34:22 IST Report Abuse
raja நல்லது சொன்னால் தமிழ்நாட்டில் உள்ள சில தற்குறிகள் எதிர்கேள்வி கேட்டு ஊளையிடும், தமிழ் நாட்டில் மட்டுமே மட சம்பிராணிகள் அதிகம் வாழுகின்றனர் எல்லாத்திலும் அரசியல் பண்ணுவானுங்க. என்ன பண்ண திருட்டு திராவிடம் ட்ரைனிங் குடுத்துருக்கு அப்படி. வளைகுடா நாட்டில் கூட முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கிறானுங்க ஆனால் இங்கு மதத்தின் பெயரால் எல்லாவற்றையும் எதிர்க்கின்றனர். இங்கே கருத்து சுதந்திரம் இருக்குங்கிற தைரியத்தில் நல்லது சொன்னாலும் அதை எதிர்ப்பானுங்க. நீங்கள் சொன்னால் எங்கு கேட்க போறானுங்க அய்யா பட்டால்தான் புத்தி வரும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஏப்-202016:58:47 IST Report Abuse
Girija கொரானா மருத்துவத்திற்கு அய்யாவின் காணிக்கை என்னவோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X