பொது செய்தி

தமிழ்நாடு

மகளின் வளைகாப்பு செலவில் துாய்மை பணியாளர்களுக்கு உதவி

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Tamil Nadu, Social activist, Grocery, Face Mask, Salem, Coronavirus, Corona, COVID-19

சேலம் : சேலத்தில், சமூக ஆர்வலர் ஒருவர், தன் மகளின் வளைகாப்பு செலவில், துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், முக கவசம் உள்ளிட்டவை வழங்கினார்.

சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, ஜவுளி தொழில் அதிபர் மற்றும் சமூக ஆர்வலர் கண்ணன், 52. இவர், தன் மகள் நிவேதிதாவுக்கு, பொள்ளாச்சியில் கடந்த, 27ம் தேதி, வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, திட்டமிட்டபடி வளைகாப்பு நடத்த முடியவில்லை.

இதற்கு செலவு செய்ய திட்டமிட்டிருந்த தொகையில், நேற்று சேலம் மாநகராட்சி துாய்மை பணியாளர்களில், 100க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.கண்ணன் கூறியதாவது:இக்கட்டான சூழ்நிலையில், துாய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது.

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என, என் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதன்படி, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல், 100 துாய்மை பணியாளர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிஉள்ளோம். மேலும், 4,000 முகக் கவசங்களும் வழங்கி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-ஏப்-202005:17:18 IST Report Abuse
meenakshisundaram பாருங்கய்யா இதுதான் 'மனித நேயம் '-ஸ்டாலின் கவனிக்க ,மற்றும் நமது திரையுலக 'ஹீரோ'களுக்கு இந்த செயதி சமர்ப்பணம் .இப்ப கொடுக்க மனமில்லேன்னா எப்பயா கொடுப்பீங்க?
Rate this:
Cancel
dm. Pukazhendhi - chennai,இந்தியா
07-ஏப்-202019:13:05 IST Report Abuse
dm. Pukazhendhi அவர்கள் (தூய்மை பணியாளர்கள்) தான் உண்மையான ஹீரோ இந்த சமயத்தில். எனவே தாங்கள் செய்த இந்த உதவி மிக சிறந்தது மிஸ்டர் கண்ணன். உங்கள் மகள் நிவேதிதாவிற்கு அந்த பணியாளர்களின் ஆசீர்வாதம் முழுமையாக உண்டு மிஸ்டர் கண்ணன். எனது வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உங்களின் மகளின் சுக பிரசவத்திற்கும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-ஏப்-202010:00:48 IST Report Abuse
அசோக்ராஜ் பரோபகாரம் கண்ணன் குடும்பத்துக்கு புதிதல்ல. பாராட்டிய தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X