கொரோனா பாதித்தவர் யார் மீதாவது எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்தவர் யார் மீதாவது எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு

Updated : ஏப் 06, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (16)
Share
சிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் மீதாவது எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாசல பிரதேச டிஜிபி எஸ்.ஆர்.மார்டி தெரிவித்தார்.'இது போன்ற சம்பவம் இமாசல பிரதேசத்தில் ஏற்கனவே நடந்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எச்சில் துப்பியதன் மூலம் பாதிக்கப்பட்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால்,

சிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் மீதாவது எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாசல பிரதேச டிஜிபி எஸ்.ஆர்.மார்டி தெரிவித்தார்.



latest tamil news



'இது போன்ற சம்பவம் இமாசல பிரதேசத்தில் ஏற்கனவே நடந்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எச்சில் துப்பியதன் மூலம் பாதிக்கப்பட்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், எச்சில் துப்பியவர் மீது கொலை வழக்கு பதிவாகும்.


latest tamil news



இதுவரை இமாசல பிரதேசத்தில் 52 பேர் தங்களுடைய வெளிநாட்டு பயண விபரங்களை மற்றும் உள்நாட்டு பயண விபரங்களை தெரிவித்துள்ளனர்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X