தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: காங்., எம்.பி., ஆதரவு| Temporary suspension of MPLADS leads to fissure within the Congress | Dinamalar

தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: காங்., எம்.பி., ஆதரவு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 06, 2020 | கருத்துகள் (23)
Share
புதுடில்லி:மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இதனை வரவேற்ற காங்., எம்பியால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி

புதுடில்லி:மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இதனை வரவேற்ற காங்., எம்பியால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் இனங்களும் குறைந்து விட்டன.


30 சதவீதம் குறைப்புஇதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முன்னாள் எம்.பிக்களின்ஊதியத்தை ஓராண்டிற்கு 30 சதவீதம் குறைத்து கொள்வது என்றும் தொகுதி மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவையும்ஒப்புக்கொண்டது.

மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ்கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் நான் ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியை மாநிலங்களின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்துமாறு கூறி வருகிறேன். தற்போதைய அரசின் முடிவு வரவேற்கதக்கது என பதிவிட்டுள்ளார். இவரது கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil news
காங்கிரஸில் சலசலப்பு


அதே நேரத்தில் காங்., கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த நடவடிக்கை "பெரும் அவதூறு" என்று கூறினார். “எம்.பி.எல்.ஏ.டி.எஸ் என்பது தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதாகும். இதை இடைநிறுத்துவது தொகுதிகளுக்கு பெரும் அவமதிப்பு மற்றும் எம்.பி.யின் பங்கு மற்றும் செயல்பாடுகளை குறைவான மதிப்பிற்கு உட்படுத்தும் ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

திருவனந்தபுரம் எம்.பி சஷி தரூர் கூறுகையில் ஒரு எம்.பி. தனது தொகுதிக்கு அபிவிருத்தி வளங்களை இயக்குவதற்கான ஒரே வழி எம்.பி.எல்.ஏ.டி.எஸ். நிதி தான் என கூறினார்.

எம்.பிதொகுதி மேம்பாட்டு நிதிரத்து விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களிடம் எழுந்துள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற கருத்து வேறுபாடால் காங்,,கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X