பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் நிவாரணம்: குவிகிறது நிதி

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
PMCARESfund,நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 399.63 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தங்களால் இயன்ற நிதியை, நிவாரணமாக வழங்க, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, தனி நபர், தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என, நிதி வழங்கி வருகின்றன. பொதுத் துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும், இதுவரை மொத்தம், 399.63 கோடி ரூபாயை வழங்கி உள்ளன.

இதில், அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கி, 100 கோடி; ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 105 கோடி; ஐ.ஐ.எப்.சி.எல்., என்ற, இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், 25 கோடி; ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 22.81 கோடி; பாங்க் ஆப் பரோடா, 20 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கி, 15 கோடி ரூபாய் வழங்கி உள்ளன.மத்திய நிதித்துறை ஊழியர்கள் உட்பட, அந்த துறை வாயிலாக மொத்தம், 430 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
07-ஏப்-202021:55:27 IST Report Abuse
Balamurugan Balamurugan மக்களிடம் பண உதவி கேட்கும் அரசு சித்த மருத்துவர்களின் மருந்தை வாங்கி நோயாளிக்கு கொடுக்க மறுப்பதேன்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-ஏப்-202020:52:24 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வருமான வரி துறை, GST துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் ஏனைய துறைகளும் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. அமலாக்க துறையினால் அல்லது வரி ஏய்ப்பு செய்தவர்களின் முடக்கப்பட்ட சொத்துக்களை கொரோன நிதிக்கு சேர்க்கலாம். ஊழல் வழக்குகளை விரைவில் முடித்து நிரூபணமானால் அந்த பணத்தையும் இந்த நிதிக்கு பயன்படுத்தலாம்.
Rate this:
Cancel
07-ஏப்-202016:52:51 IST Report Abuse
நக்கல் எல்லோரும் கொடுத்து முடித்தவுடன் சுடாலின் ஒரு தொகையை அறிவிக்கப்போகிறார்... அந்த தொகையை பார்த்து கொரோனா ஓடிவிடும்... பொறுத்திருந்து பாருங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X