போன் செய்தால் டெலிவரி... ஆளுங்கட்சியினரின் 'சரக்கு' வெறி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஏப் 07, 2020 | |
Advertisement
ஊரடங்கு தொடர்வதால், சித்ராவும், மித்ராவும், மொபைல் போன் மூலம் 'வீடியோகால்' செய்து பேசிக்கொண்டனர்.''என்ன மித்து, நல்லாயிருக்கியா? கொஞ்சம் குண்டான மாதிரி தெரியுது''''இல்லக்கா... அதே மாதிரிதான் இருக்கேன். ரொம்ப நாள் பார்க்காம இருந்ததால், உங்களுக்கு அப்படி தெரியுது போல,''உடனே சிரித்த சித்ரா, ''ஓ.கே., மித்து, அவரச பயணத்துக்கு அனுமதி சீட்டு எங்கே
 போன் செய்தால் டெலிவரி... ஆளுங்கட்சியினரின் 'சரக்கு' வெறி

ஊரடங்கு தொடர்வதால், சித்ராவும், மித்ராவும், மொபைல் போன் மூலம் 'வீடியோகால்' செய்து பேசிக்கொண்டனர்.

''என்ன மித்து, நல்லாயிருக்கியா? கொஞ்சம் குண்டான மாதிரி தெரியுது''

''இல்லக்கா... அதே மாதிரிதான் இருக்கேன். ரொம்ப நாள் பார்க்காம இருந்ததால், உங்களுக்கு அப்படி தெரியுது போல,''உடனே சிரித்த சித்ரா, ''ஓ.கே., மித்து, அவரச பயணத்துக்கு அனுமதி சீட்டு எங்கே தர்றாங்க?''

''அக்கா, ஒருவாரம் மட்டும் ஆர்.டி.ஓ., ஆபீசில் கொடுத்தாங்க. ஆனா, ஆர்.டி.ஓ., எப்ப கேட்டாலும், 'ரவுண்ட்ஸில்' இருக்கேன்னு சொல்லியே காலம் கடத்திட்டாராம்,''

''இதனால, சொந்தக்காரங்க இறந்ததற்கு அனுமதி கேட்டுப்போன ஒரு லேடிகிட்ட, ஆதாரம் இருக்காம்மானு கேட்டாராம். 'போட்டோ' இருந்தாதான் தருவேன்னு, சொல்லியிருக்கார்,''

''அடக்கொடுமையே...''''கடைசியில, அந்தம்மா உருண்டு, புரண்டு அழுததால, உடனே சீட்டு குடுத்திட்டாங்களாம்,''''இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடி மித்து''

''அதனாலதான், கலெக்டர் ஆபீசில வச்சு, அவசர பயண அனுமதி சீட்டு தர்றாங்களாம்,'' என்ற மித்ரா, ''அக்கா... தனி ஒருவரா, ஆய்வு கூட்டத்தை நடத்தினாராம், தெரியுங்களா?'' கேள்வி கேட்டாள்.''தெரியலையே...''

'கலெக்டர் ஆபீசில் நடக்கிற கொரோனா ஆய்வு கூட்டத்துக்கு தன்னை கூப்பிடறதில்லேன்னு கோபப்பட்ட எம்.பி., தனி ஒருவரா, போயி, மெடிக்கல் காலேஜ் டீன், ஜே.டி.,யை வரச்சொல்லி, கொரோனா ஏற்பாடுகளை கேட்டு தெரிஞ்சுட்டு போயிட்டாராம்,'' விளக்கினாள் மித்ரா.''அப்புறம் தொகுதி எம்.பி., எதுக்கு இருக்கிறாரு?'

'''அக்கா... நீங்க சொல்றது கரெக்ட்தான். அதவிடுங்க. ஆபீசர்களை, வட மாநில தொழிலாளர் இம்சை செய்ததை கேளுங்க...''

''சொன்னதான்டி தெரியும்'''

'ஊரடங்கு அறிவிச்சதும், வட மாநில தொழிலாளர் பல ஆயிரம் பேர் ரயிலை புடிச்சு, தங்களோட சொந்த ஊருக்கு போயிட்டாங்க. ஆனா, போக முடியாதவங்க, கலெக்டர் ஆபீஸ் 'கன்ட்ரோல் ரூம்'க்கு போன் போட்டு படுத்தி எடுத்துட்டாங்களாம்''

''தினமும், ஒவ்வொருத்தரா போன் போட்டு அதிகாரிகளை இம்சை குடுத்திட்டாங்களாம். எங்களுக்கு வேலை கொடுங்க... இல்லைன்னா, எங்க ஊருக்கு அனுப்பிச்சு வையுங்க,' நச்சரிச்சிருக்காங்க. அதிகாரிங்க எப்படியோ, உணவு பொருட்களை கொடுத்து சமாதானம் செஞ்சுட்டு வந்திருக்காங்க'' என்றாள் மித்ரா.

''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''ரேஷன் கடையில, ஆளும்கட்சிக்காரங்க ரொம்ப அலப்பறையாம்,'' என, கேட்டாள்.''அதை ஏன் கேக்கறீங்க. 'மாஜி' கவுன்சிலர், வட்டம், சதுரம்னு எல்லோரும் கும்பலா போனதோட, 'மாஸ்க்'கும் போடாம போயி, போட்டோ எடுத்துட்டு 'பேஸ்புக், வாட்ஸ்அப்'பில், பதிவிட்டுட்டு நடையை கட்டிட்டாங்களாம்,''

''அவங்க எப்பவுமே அப்படித்தான் மித்து. இதேமாதிரி, இன்னொரு ரேஷன் கடை மேட்டரை கேளு,''

''சொல்லுங்க்கா...''

''மண்ணரை, பவானி நகர் ரேஷன் கடைக்கு போன சில, பெண்கள் எங்களுக்கு நிவாரணம் குடுங்க'ன்னு கேட்டிருக்காங்க. 'ஆமா... நீங்க எந்த ஊரு?'ன்னு கேட்டிருக்காரு. 'எல்லாம் வெளியூர்தான். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தோம், பஸ் இல்லே. எப்படி ஊருக்கு போறதாம்,''

''அதனால, பணத்தை இங்கேயே குடுங்க இல்லேனா ஊருக்கு அனுப்புங்க'ன்னு அடம்புடிச்சாங்களாம். கடைசியில தாசில்தார் வந்து சமாதானம் செஞ்சாராம்,''அப்போது, கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவே ஜன்னல் வழியே பார்த்தாள் மித்ரா.

அதனை கவனித்த சித்ரா, ''யாருடி அது? இன்னோவா காரில் வந்தது,'' என்றதற்கு, ''அக்கா... பக்கத்து வீட்டுக்கு வந்திருக்காங்க,'' பதிலளித்தாள் மித்ரா.''இந்த காரை பார்த்ததும், கோழிப்பண்ணையூர் மேட்டர் நினைவுக்கு வந்திடுச்சு''

''அது என்னக்கா, மேட்டர்?''

''அங்குள்ள ரெஜிஸ்டர் ஆபீசில் வேல பார்க்கிற ஒருத்தர், முத்தான ஊரில் இருந்து, டெய்லி இன்னோவா காரில்தான் வர்றாராம். எல்ேலாருக்கும் தெரிஞ்சா பிரச்னை வந்திடும்னு காரை, கொஞ்சம் துாரம் தள்ளி நிறுத்துவாராம். இத்தனைக்கு அவர் ஆபீஸ் அசிஸ்டென்ட்தானாம். பத்திரம் பதிய வர்றவங்கிட்ட, கைரேகை வாங்கிறதுதான் அவர் டியூட்டியாம். ,''

''அடேங்கப்பா... கைநாட்டு வாங்குறவர் இன்னோவாவில் வந்தாருன்னா, கையெழுத்து போடறவர், பி.எம்.டபிள்யூ.,வில்தான் வரணும். ஏன்னா.. அந்தளவுக்கு அங்கே, பணம் கபடி விளையாடுது போல...''

''கரெக்டா... சொன்ன மித்து'' என சிரித்த சித்ரா, ''சூரியக்கட்சியில ஏதோ 'வாட்ஸ்அப்'மேட்டர் ஓடுதாம்''''ஆமாங்க்கா... அந்த கட்சி குரூப்பில், '2021ல் தேர்தலில், தற்போதைய ெஹல்த் மினிஸ்டரை' சி.எம்., வேட்பாளராக அறிவித்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும்', என ஒருவர் பதிவிட்டாராம். 'அடுத்த தேர்தலில் நாம ஆட்சியை பிடிப்போம்னு நம்ம ஆட்களுக்கே நம்பிக்கை வரமாட்டேங்குது'ன்னு மத்த நிர்வாகிகள் புலம்பி தள்றாங்களாம்,''

''மொபைல் மூலமாக மது சப்ளை, ஸ்டேஷன் ஆசியோட நடந்தது பற்றி தெரியுமா?,'' என்றாள் சித்ரா.''ஊரடங்கு உத்தரவிலும், 'சரக்கு' ஜோரா கிடைக்குதாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அதானே, என்னடா, இன்னும் மேட்டர் சொல்லலையேன்னு பார்த்தேன்,''

''கொடுவாய், அவிநாசிபாளையத்தில் ஒரு சில போலீசாரின் ஆசி யோடு, மொபைல் போன் மூலம், சரக்கு விக்கிறாங்களாம்,''''ஒரு 'பார்' ஊழியரின் மொபைல் போனுக்கு பேசினால், 'சரக்கு' வீடு தேடி வருதாம். ஆனா, மூனு மடங்கு விலையாம். போனாலும், பரவாயில்லைனு, சில 'குடி'மகன்கள் வாங்கிக்கிறாங்களாம்,''''இந்த சரக்கு மேட்டர் அதிகாரிக்கு தெரியுமா, மித்து?''

''ம்... ஹூம். அதுதான், கீழே உள்ளவர்கள் மறைச்சிடறாங்களே,''திடீரென்று, இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நொடிகளில், லைனுக்கு மீண்டும் வந்த சித்ரா, ''மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிங்களே அலட்சியமாக இருக்காங்க,'' என்றாள்.

''யாருங்க்கா... அந்த அதிகாரி?''''கொரோனா விழிப்புணர்வு குறித்து, அடிக்கடி ஆய்வு செல்லும் அந்த 'சிவனின் மைந்தரான' அதிகாரி, 'மாஸ்க்' அணியறதில்லையாம். ஆனா, கூட போறவங்க கண்டிப்பாக அணியணுமாம்,''

'இதென்னங்க்கா... கூத்தா இருக்குது. ஏன், அவருக்கு நோய் தொற்று வராதா?''''டி...மித்து, உடுமலையில், பாதுகாப்பு இல்லாத 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் உள்ள பாட்டில்களை, நகராட்சி மண்டபத்துக்கு சமீபத்தில் மாத்தினாங்களாம்...'' என இழுத்தாள் சித்ரா.''என்ன... லவட்டிட்டாங்களா?''

''ஆமான்டி, பாட்டில் மாத்துற சைக்கிள் கேப்பில், பல பெட்டி மதுபாட்டிலை, ஆளுங்கட்சிகாரங்க கடத்திட்டு போயிட்டாங்களாம். அப்புறமென்ன, கொரோனா பயத்திலும், கொண்டாட்டம் போடறாங்க மித்து,'' என்ற சித்ரா, ''ஓ.கே., மித்து, போன் சூடாயிடுச்சு. இடையில கூப்பிடறேன்,'' என இணைப்பை துண்டித்தாள்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X