சேவை அபாரம்… தேவையா அபராதம்?| Dinamalar

சேவை அபாரம்… தேவையா அபராதம்?

Added : ஏப் 07, 2020
Share
வீட்டு மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தாள் சித்ரா. கரம் மசாலா டீ கொடுத்து உபசரித்த மித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த 'வாட்ஸ்அப்' பதிவுகளை நோண்ட ஆரம்பித்தாள்.''என்ன மித்து, 'கொரோனோ' அப்டேட் ஏதாச்சும் இருக்கா,'' என, பேச்சை துவக்கினாள் சித்ரா.''இதே மாதிரி நிலைமை போச்சுன்னா, இன்னும் கொஞ்ச நாளிலேயே மூன்றாவது ஸ்டேஜ்க்கு போனாலும்
 சேவை அபாரம்… தேவையா அபராதம்?

வீட்டு மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தாள் சித்ரா. கரம் மசாலா டீ கொடுத்து உபசரித்த மித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த 'வாட்ஸ்அப்' பதிவுகளை நோண்ட ஆரம்பித்தாள்.''என்ன மித்து, 'கொரோனோ' அப்டேட் ஏதாச்சும் இருக்கா,'' என, பேச்சை துவக்கினாள் சித்ரா.''இதே மாதிரி நிலைமை போச்சுன்னா, இன்னும் கொஞ்ச நாளிலேயே மூன்றாவது ஸ்டேஜ்க்கு போனாலும் போயிடுவோம்னு, ஹெல்த் டிபார்ட்மென்ட்டுக்காரங்க சொல்றாங்க. 'லிஸ்ட்டெடு' ஏரியாவுல வீடு வீடா போயி, சளி, காய்ச்சல், இருமல் இருக்கான்னு விசாரிக்கிறாங்க.''சில ஏரியாக்கள்ல மக்கள் ஒத்துழைக்கறதில்லை. முக்கிய பிரமுகர்களை மாவட்ட நிர்வாகத்தினர் கூப்பிட்டு பேச்சு நடத்தி, உண்மையை புரிய வச்சிருக்காங்க. இதுக்கு பின்னாடி தான், எவ்ளோ பேருக்கு நோய் தொற்று இருக்குங்கிற தகவலை, வெளிப்படையா சொல்லி இருக்காங்க,''''இருந்தாலும், இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில யாராச்சும் இறந்தாங்கன்னா, 'கொரோனா' இல்லைன்னு சொல்றாங்களே,'' என, நோண்டினாள் சித்ரா.''ஆமாக்கா, 'கொரோனா' பிரச்னைக்கு பின்னாடி, நாலு பேரு இறந்திருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா காரணம் சொல்லியிருக்காங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் மறைக்க முடியும்,'' என்ற மித்ரா, ''நம்மூரு தாசில்தார் ஒருத்தர், அரிசி மூட்டைய முதுகுல துாக்குன வீடியோ, வைரலா பரவிக்கிட்டு இருக்கு, தெரியுமா,'' என்றாள்.''ஆமா மித்து, எனக்கும் அந்த வீடியோ வந்துச்சு. அவரு பெயரு, மகேஷ்குமார்; வடக்கு தாசில்தாரா இருக்காரு. தொழிலாளர்களோட சேர்ந்து, அரிசி மூட்டையை இறக்கி வச்சிருக்காரு. ஆவராம்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில இருக்கற குடும்பங்களுக்கு, 500 கிலோ அரிசி, 150 கிலோ கோதுமை மாவு, அஞ்சு பெட்டி பிஸ்கட் கொடுத்து, உதவி செஞ்சிருக்காரு. ஏரியா மக்கள் ரொம்ப சந்தோஷப்பட்டாங்களாம்,''''கார்ப்பரேஷன் அதிகாரி ஒருத்தரும், வீடியோ வெளியிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேனே,''''அதுவா, கார்ப்பரேசன் பி.ஆர்.ஓ., மதியழகன், 'வல்லமை தாராயோ...' ங்கற தலைப்பில, 'கொரோனா' விழிப்புணர்வு பாட்டு எழுதி, காந்திபுரத்துல இருக்குற ஸ்டுடியோவுல ஒளிப்பதிவு செஞ்சு, 'வாட்ஸ்அப்' குழுக்கள்ல வெளியிட்டு இருக்காரு.''அதைக்கேட்ட கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், பி.ஆர்.ஓ.,வுக்கு இவ்ளோ தெறமை இருக்கான்னு, அசந்து போயிட்டாங்க. மாநகராட்சி சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறைக்கு மரியாதை தேடிக்கொடுக்குற அந்த வீடியோ, 'வாட்ஸ்அப்' குழுக்கள்ல 'வைரல்' ஆகிட்டு இருக்கு,''''அதெல்லாம் சரி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பிரட் வீடியோ வந்துச்சே. அந்த கடை ஓனருக்கு போலீஸ்காரங்க, 'பைன்' விதிச்சதா கேள்விப்பட்டேனே,''''ஆமாப்பா, அதுவும் உண்மைதான்! ரத்தினபுரி போலீஸ்காரங்க ரோந்து பணிக்கு போயிருக்காங்க. ரத்தினபுரியை சேர்ந்த ஒருத்தரு, ஏற்கனவே இறந்து போயிருக்கறதுனால, போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி, ஏரியாவை சுத்தியிலும் மையத்தடுப்பு வச்சிருக்காங்க. ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும்போது, பிரட் விக்கிறதாச் சொல்லி, கூட்டத்தை சேர்க்குறாரு; நோய் பரப்புற விதமா நடந்துக்கிட்டாருன்னு சொல்லி, 2,300 ரூபாய் அபராதம் விதிச்சிருக்காங்க,''''அச்சச்சோ... அப்புறம் என்ன நடந்துச்சு,''''150 பிரட் வச்சதுல, 100 பிரட்டுக்குதான் பணம் இருந்துச்சு; 50 பிரட்டுகளை ஓசியில எடுத்துட்டு போயிட்டாங்கன்னு, கடை ஓனரு புலம்பியிருக்காரு. அத்தியாவசிய பண்டங்கள் பிரிவுல பிரட் வராது; உன்னை யாரு வைக்கச் சொன்னதுன்னு சொல்லி, வழக்கு பதிவு செஞ்சு, பைன் போட்டிருக்காங்க,''''அதிருக்கட்டும், இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில, 'கொரோனா' டெஸ்ட் எடுக்காதவங்களையும் தனிமைப்படுத்தி வச்சிருக்கிறதா சொல்றாங்களே, உண்மையா,''''யெஸ் மித்து, நீ சொல்றது கரெக்ட் தான்! உதாரணத்துக்கு, ஒரு வார்டுக்குள்ள, 20 பேரை 'அட்மிட்' செஞ்சிருக்காங்கன்னா, 14 பேரின் சளி, ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பியிருக்காங்க; 6 பேருக்கு 'டெஸ்ட்' செய்யலையாம். இருந்தாலும், ஒரே வார்டுல வச்சிருக்கிறதுனால, மத்தவுங்க பயத்துல இருக்காங்க,''''சில நோயாளிகள் 'எஸ்கேப்' ஆனதா சொன்னாங்களே,''''ரெண்டு பேரு, நைட் நேரத்துல தப்பிச்சிருக்காங்க. கண்டுபிடிச்சு திரும்பவும் கூட்டிட்டு வந்துட்டாங்க. ரெண்டு பேரு தப்பிக்க முயற்சி செஞ்சப்பவே, பிடிச்சிட்டாங்க. அதனால, பாதுகாப்பை பலப்படுத்தணுங்கிற கோரிக்கை எழுந்திருக்கு. ஆனா, சிங்காநல்லுார் போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்,''''ஏன்க்கா, அவுங்க வேலையே பாதுகாப்பு கொடுக்கறதுதானே,''''மித்து, 'கொரோனா' சிகிச்சையில இருக்கறவங்க பெயரையோ, ஏரியாவையோ வெளியே சொல்லக்கூடாதுன்னு, கவர்மென்ட் சொல்லியிருக்கு. ஆனா, சிங்காநல்லுார் போலீஸ்காரங்க, தனிமைப்படுத்தி இருக்கறவங்களை போட்டோ எடுத்து, 'வாட்ஸ்அப்'புல பகிர்ந்திட்டு இருக்கறதா, புகார் கிளம்பியிருக்கு,''''அக்கா, இந்த மாசக்கடைசி வரைக்கும், ஊரடங்கு நீடிக்கும்னு சொல்றாங்களே,'' என, அச்சத்துடன் கேட்டாள் மித்ரா.''கொரோனா பிரச்னையில சென்ட்ரல் கவர்மென்ட் என்ன முடிவெடுக்குதோ, அதை செயல்படுத்த ஸ்டேட் கவர்மென்ட் முடிவு செஞ்சிருக்கு. வர்ற, 30ம் தேதி வரை நீட்டிச்சா, நோய் பரவாம தடுக்க முடியும்னு, ஹெல்த் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ் நினைக்கிறாங்க.''இருந்தாலும், கம்பெனிகளை இயக்குறது சம்பந்தமா, சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க,'' என்றபடி, மாடியில் இருந்து கீழிறங்கினாள் சித்ரா.வராண்டாவில், அன்றைய நாளிதழ்கள் இருந்தன.எடுத்து படித்த மித்ரா, ''அப்ப, இந்த மாசமும் நிதி நெருக்கடி ஏற்படும்னு சொல்லுங்க,'' என்றாள்.''எல்லாத்தரப்பு மக்களுக்கும், இன்னும் சில மாசங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கத்தான் செய்யும். 'கொரோனா' பிரச்னையில இருந்து மீண்டெழுந்து வந்தாலும், அடுத்ததா, ஸ்கூல் பீஸ் செலுத்துற பிரச்னை வரும்,''''ஆனா, 'ப்ளைண்ட்' பாளையம் ஊராட்சியில கரன்சி மழை கொட்டுதாமே,''''அதுவா, கோடை காலத்துல புதுசா குடிநீர் இணைப்பு வழங்க தடை விதிக்கிறது வழக்கம். ஆனா, 20 ஆயிரத்துல இருந்து, 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லஞ்சம் வாங்கிட்டு, ஏற்கனவே கனெக்சன் இருக்குற வீட்டுக்கே ரெண்டாவது, மூணாவதுன்னு இணைப்பு கொடுக்குறாங்களாம். தி.மு.க., கவுன்சிலர் ஒருத்தரு, கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்காரு. நடவடிக்கை எடுக்கலையாம்,''''அக்கா, ஆளுங்கட்சிக்காரங்க மேல ஆக்ஷன் எடுக்கறதுக்கு அதிகாரிங்க ரொம்பவே தயங்கறாங்க. ரேஷன் கடை ஊழியர்கள்தான் வீடு வீடா போயி, டோக்கனும், பணமும் கொடுக்கணும்னு சொன்னாங்க. என்ன நடந்துச்சு, ஆளுங்கட்சிக்காரங்கதான் கொடுத்தாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கறவை மாடு வாங்குனதுல முறைகேடு நடந்துச்சே. துறை ரீதியா ஆக்சன் எடுக்கப் போறதா சொன்னாங்க. ஒருத்தர் மேல கூட நடவடிக்கை எடுக்கலையே,''''மித்து, கொரோனா பிரச்னை முடிஞ்சதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போறாதா சொல்றாங்களே, உண்மைதானா,'' என, 'ரூட்' மாற்றினாள் சித்ரா.''அப்படித்தான், உள்ளாட்சி துறை அதிகாரிங்க பேசிக்கிறாங்க. பொருளாதார சிக்கல்ல பொதுஜனங்க இருப்பாங்க. கரன்சியை அள்ளி விட்டு, ஓட்டுகளை அள்ளுறதுக்கு 'பிளான்' போட்டிருக்காங்களாம். ஓட்டு வங்கி இருக்கற இடங்களை மையப்படுத்தி, சில பேரு, உணவு பொட்டலம், பிரட் வாங்கிக் கொடுத்திட்டு இருக்காங்க,'' என்ற மித்ரா, ''தன்னார்வலர்கள் ஏகப்பட்ட பேரு, போட்டி போட்டுக்கொண்டு, உணவு பாக்கெட் கொடுக்கறதிலும் காசு பார்க்குறாங்களாம்,'' என, கொக்கி போட்டாள்.''ஆமாப்பா, கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் பகுதியில சில பேரு, உணவு தயாரிக்கறதா சொல்லி, சிறு குறு நிறுவனங்கள்ட்ட, வசூல் வேட்டை நடத்திட்டு இருக்காங்களாம். கம்பெனிக்காரங்க புலம்புறாங்க,''''வருவாய்த்துறை அதிகாரிகளும் புலம்பிட்டுதான் இருக்காங்களாம்,''''ஏன், அவுங்களுக்கு என்னாச்சு,''''ஆதரவின்றி தவிப்போருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குற இடத்துல தாசில்தார், ஆர்.டி.ஓ., - வி.ஏ.ஓ.,ன்னு வருவாய்த்துறை அதிகாரிங்க இல்லாம, எந்த வேலையும் நடக்காது. ஆனா, நிவாரண பொருட்களை போலீஸ்காரங்க கொடுக்குற மாதிரி, இமேஜ் கிரியேட் பண்ணுறாங்களாம். வருவாய்த்துறை உயரதிகாரிங்க மனகஷ்டத்துல இருக்காங்க.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நாங்களும் கிருமி நாசினி தெளிக்கிறோம்னு சொல்லி, கார்ப்பரேஷன்ல இருந்து, பிளிச்சிங் பவுடர் ரெண்டு மூட்டை ஓசி வாங்கி, கலவரத்தை ஒடுக்க, தண்ணீரை பீய்ச்சி அடிக்கிற வாகனத்துல கலந்து, கலெக்டர் ஆபீசுக்கு பக்கத்துல தெளிச்சு, 'சீன்' கிரியேட் பண்ணுனாங்க,''''அதிருக்கட்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில, அரசு அதிகாரிங்க கவனம் செலுத்தியிருக்கிறதுனால, மணல் கடத்தும் மாபியா கும்பல், தொம்பிலிபாளையம், செம்மேடு பகுதியில, நொய்யல் ஆத்துல இருந்து மணல் கடத்தி, தோட்டத்துக்குள்ள குவியல் குவியலா சேர்த்து வச்சிருக்காங்களாம். வருவாய்த்துறை அதிகாரிங்க கண்டுக்கறதில்லைன்னு சொல்றாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X