எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

செல்லப்பிராணிகளிடம் 'கொரோனா' பயம் வேண்டாம்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 செல்லப்பிராணிகளிடம் 'கொரோனா' பயம் வேண்டாம்

''விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவியதாக ஆதாரம் இல்லை. அமெரிக்காவில் புலிக்கு மனிதனிடம் இருந்து தான் பரவியது. இதனால் செல்ல பிராணிகளிடம் கொரோனா பயம் வேண்டாம்'' என மதுரை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

சீனாவில் இரண்டு நாய்களுக்கு மனிதர்கள் மூலம் கொரோனா பரவியதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்கா வனஉயிரின சரணாலயத்தில் 4 வயதான பெண் புலிக்கு ஊழியர் மூலம் கொரோனா பரவியது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வன உயிரின சரணாலயத்தில் உள்ள விலங்குகளை கண்காணிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியதாவது: நம் ஊரில் செல்ல பிராணிகள் என்றால் நாய்கள் தான் பிரதானமாக இருக்கின்றன. வீட்டு நாய்களுக்கு தினமும் உணவு கிடைத்து விடும். ஒரே தெருவில் பிறந்து, வளர்ந்த நாய்களுக்கு அந்தந்த தெரு மக்கள் உணவு கொடுத்து விடுவார்கள். ஆனால், ஆதவரற்ற நாய்களுக்கு எப்போதும் போதுமான உணவு கிடைப்பதில்லை.

கொரோனா காரணமாக முகக்கவசம், கையுறை அணிந்து இடைவெளி விட்டு தெரு நாய்கள், ஆதவரற்ற நாய்களுக்கு உணவு வைக்கலாம். வீட்டு பிராணிகளை நம் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவதை தவிர்க்கலாம். உடல்நிலை சரியில்லாத நாய், பூனை, மாடுகளை கூடுதல் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இதனால் நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் நம்மிடம் இருந்து அவைக்கு பாதிப்பு ஏற்படலாம். மதுரையில் கால்நடை துறை சார்பில் தன்னார்வலர்கள் மூலம் தெரு நாய்களுக்கு தினமும் உணவு வழங்குகிறோம், என்றார்.

-நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - chaennal,இந்தியா
07-ஏப்-202008:23:36 IST Report Abuse
srinivasan Don't take any risk. If you have the virus and it affects the pets then it's a risk. And from the pets it will affect others also. It's better we should just provide them food and keep it in a distance
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X