பொது செய்தி

இந்தியா

ஒடிசாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
mask, Odisha, coronavirus, covid 19, ganjam district, india fights corona, face mask, முககவசம்,கொரோனா

புவனேஷ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அல்லது கைக்குட்டை மூலம் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருதா குலங்கே, வீட்டை விட்டு வெளியே வரும் போது பொதுமக்கள் முகக்கவசமோ, கைக்குட்டை அல்லது ஸ்கர்ப் மூலம் முகத்தை மறைக்காமல் நகரப்பகுதியில் நடமாடினால் ரூ. 1,000, கிராமப்புறம் என்றால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும். முகக்கவசம், கைக்குட்டை அல்லது ஸ்கர்ப் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.


latest tamil news




இதேபோல், எந்தவொரு காரணமுமின்றி வெளியே தெருக்களில் நடமாடுவோர் காவலில் எடுக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் முதல்முறையாக முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு அபராதம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குகுதகாண்டி தொகுதியில் பாகலதி கிராம பஞ்சாயத்தின் கீழ் உள்ள மத்தியா சாஹி கிராமத்தை கோவிட் -19 ஹாட்ஸ்பாட் என்று அறிவித்து அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-ஏப்-202009:38:43 IST Report Abuse
அசோக்ராஜ் பாரம்பர்ய புத்தி எப்படி வேலை செய்யுது பாரு? நகரத்துக்கு 1000. கெராமத்துக்கு 500. ஏன் அதோடு நிறுத்திட்டாங்க? OBCக்கு 30%, MBCக்கு 40%, SCக்கு 50% மூர்கனுக்கு 100% அபராதத்தில் தள்ளுபடி தரலாமே? சமூகநீதியைத் தூக்கிப் பிடிக்காவிட்டால் அது செத்துப் போயிடாதா? சுப்ரீம் கலீஜியம் 'ஸூவோ மோட்டு' இன்று நடவடிக்கை எடுக்கணும். பண்ணைப்புரத்து சொடலை நவீன் பட்டுநாயகத்துக்கு சபரீசனை விட்டு கடிதம் எழுதி, தானே கையைளுத்துப்போட்டு அதை ஃபேஸ்புக்கில் வெளியிடுவாரா?
Rate this:
Cancel
07-ஏப்-202007:31:48 IST Report Abuse
ஆரூர் ரங் தலைக்கு மாஸ்க் கட்டாயம். முகத்துகில்லை என நினைப்பவர் களை எதிர்த்துக் கொள்ள தைரியமுண்டா . வாக்கு வங்கி?
Rate this:
Cancel
07-ஏப்-202007:23:38 IST Report Abuse
J SHANMUGASUNDARAM தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாஸ்க் கிடைககவில்லை அமைச்சர்கள் முதல்வர் நீதியரசர்கள் வாழும்பகுதி,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X