பொது செய்தி

இந்தியா

கொரோனா நினைவலைகள்...

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020
Share
Advertisement
coronavirus,covid19,coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு (மார்ச் 24--ஏப்.14) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று 14வது நாளில் காலடி எடுத்து வைக்கிறோம். கடந்த 13 நாட்கள் கடினமானது. இருப்பினும் குற்றச்செயல்கள் குறைந்தது, வாகனங்களின் நச்சுப்புகை இல்லாதது ஆறுதலான விஷயம். இந்த காலக்கட்டத்தில் அரங்கேறிய சில சுவாரஸ்ய நிகழ்வுகள்.


வணக்கம் இந்தியா


கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரியமான கைகூப்பி வணக்கம் சொல்லும் முறை உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரமாக இருந்த கைகுலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவை காணாமல் போயின.


'ஆன்லைன்' திருமணம்


கொரோனா அச்சம் காரணமாக பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன. சிலர் குறைந்த எண்ணிக்கையிலான உறவுகளுடன் திருமணம் செய்தனர். தெலுங்கானாவில் கொஞ்சம் புதுமையாக ஆன்லைனில் திருமணம் நடந்தது.

துபாயில் இருந்தார் மணமகன். கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. கடைசியில் திருமணத்தை ஆன்லைனிலேயே நடத்த இரு வீட்டாரும் சம்மதித்தனர். குறித்த நாளில் அலைபேசி வீடியோ அழைப்பு மூலம் திருமணம் நடந்தது.

* கேரளாவின் கண்ணுாரை சேர்ந்த டாக்டர் ஷிபா. இவருக்கு கடந்த மார்ச் 29ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனிடயே கொரோனா சிகிச்சை தரும் குழுவில் ஷிபா சேர்க்கப்பட்டார். திருமணத்துக்கு விடுமுறை தர நிர்வாகம் முன்வந்த போதும், அதை தள்ளி வைத்து விட்டு, தொடர்ந்து கொரோனா வார்டில் பணி செய்கிறார்.


மாறிய 'முகம்'


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது மாறியது. சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், முகத்தில் 'மாஸ்க்' அணிதல், வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது, தனிமைப்படுத்திக் கொள்வது என, மனித வாழ்க்கையே திசை மாறியது.


கொரோனா வைரஸ் 'ஹெல்மெட்'


சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜீஷ்பாபு சற்று வித்தியாசமாக கொரோனா வைரஸ் போல் 'ஹெல்மெட்' அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவர் கூறுகையில், ''இந்த முறையிலான விழிப்புணர்வு மக்களை கவர்ந்துள்ளது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதே நல்லது என்பதை 'ஹெல்மெட்' மூலம் உணர்த்தியுள்ளோம்,'' என்றார்.


கோவிட், கொரோனா குழந்தை


சத்தீஸ்கரின் ராய்பூரில் மார்ச், 27ல் பிரீத்தி வர்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில், ஆண் குழந்தைக்கு 'கோவிட்', பெண் குழந்தைக்கு 'கொரோனா' என பெயரிடப்பட்டது. இவர் கூறுகையில், ''உயிருக்கு ஆபத்தான வைரசாக இருந்தாலும், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. அதனை நினைவில் கொள்ளும் வகையில் பெயரிட்டுள்ளோம்,'' என்றார்.


பாடல் பரவசம்


கொரோனா ஒழிப்பு தொடர்பாக பல்வேறு அமைப்புகளால் விழிப்புணர்வு பாடல்கள் அரங்கேற்றப்பட்டன. 'தொட்டு விட தொட்டு விட தொடரும்', 'வீட்ட விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்,' போன்ற பழைய பாடல்களை வைத்து 'மீம்ஸ்'களும் கிளம்பின.


'மோடி மேஜிக்'


கொரோனா ஒழிப்பு போரில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு. இவரது வேண்டுகோளை ஏற்று மார்ச் 22, மாலை 5:00 மணிக்கு கொரோனா ஒழிப்பு பணியில் சேவை செய்பவர்களுக்காக கைதட்டினர். ஏப்.5ல் இரவு 9:00 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றி கொரோனாவை விரட்டும் பணியில்
மோடிக்கு கைகொடுத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X