1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (22) | |
Advertisement
மும்பை: கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார்.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதுடன், சினிமா
Amitabh Bachchan, coronavirus, covid 19, ration, cinema workers, food supplies, celebrity news, coronavirus updates, big b, அமிதாப்,அமிதாப்பச்சன்,சோனி

மும்பை: கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதுடன், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எதிர்பாராத சூழலில் நாம் இருக்கும் நிலையில், திரு. அமிதாப் பச்சன் மற்றும் வி ஆர். ஒன் ஆதரவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மூலம், நாடு முழுவதும் ஒரு லட்சம் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை அளிக்க உள்ளோம் என சோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


latest tamil news
இந்தியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுடன் வணிகரீதியாக இணைந்து, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு உடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்படுமென தெரிவித்துள்ளது. எப்போது முதல் சினிமா தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் துவங்குகிறது என்பதை சோனி நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சோனி நிறுவனத்தின் சி.இ.ஓ , என்.பி.சிங் கூறியதாவது: சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர் செயல்பாட்டின் ஒரு பகுதியாக , பச்சனுடன் இணைந்து தினக்கூலி அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் சோனி நிறுவனத்தின் கோன் பனேஹா குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்தி வருகிறார். குறைந்தபட்சம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

கொரோனா சமயத்தில் வீட்டில் இருப்பதன் முக்கியத்துவம், சமூக விலகலை கடைப்பிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோனி நிறுவனம் தயாரிக்கும் ' ஃபேமிலி' என்ற குறும்படத்தில் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அமிதாப் பச்சன் தோன்றவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
07-ஏப்-202022:33:41 IST Report Abuse
adalarasan நம்ம ஊரு ஹாசன் அவர்கள் ஒரு பத்ஹாயிரம் பேருக்கு… செய்வார்...மற்றவர்கள் எல்லோரையும்.. தாக்க தான் ..தெரியுமா…?
Rate this:
Cancel
hare - bangalore,இந்தியா
07-ஏப்-202012:30:54 IST Report Abuse
hare Why Not o tAll Suffering General People Why Only Cinema Artistes
Rate this:
Cancel
Karthick Madurai - Madurai,இந்தியா
07-ஏப்-202011:17:20 IST Report Abuse
Karthick Madurai இது என்ன பெருசா ... எங்க ஊருல பிரதமருக்கு சல்லி காசு செலவில்லாம கடிதம் எழுதிட்டு விளம்பரம் தேடும் கமல் இருக்கிறார். சிறு வயதில் இருந்து சோறு போட்ட சினிமாவுக்கு ஒரு பைசா கூட குடுக்காம விளம்பரம் தேடினார் பார்த்தீர்களா ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X