சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Coronavirus, china, covid 19, Beijing, Wuhan, சீனாவில், மீண்டும், வேகமெடுக்கும், கொரோனா

பீஜிங்,: சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடர, அரசு முடிவு செய்துள்ளது.

அண்டை நாடன சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுதும் வேகமாக பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடும் கட்டுப்பாடு

சீனாவில், 3,331 பேர், வைரஸ் தாக்குதலுக்கு பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வூஹான் நகரில் பரவிய கொரோனா, மெல்ல மெல்ல, சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, சீன அரசு, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.


latest tamil news




சமீபகாலமாக பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, வூஹான், பீஜிங் நகரங்களில் கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த சீனர்கள், விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கணிசமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவலை

நேற்று மட்டும், புதிதாக, 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 38 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடரும்படி, அரசுக்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுப்பதால், இதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல், சுகாதாரத் துறை அதிகாரிகள் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
07-ஏப்-202014:21:53 IST Report Abuse
sathyam நாடகம் அன்றோ நடக்குது. இப்போ, உலக நாடுகள் சந்தேகம். அதனால் நாடகம் அன்றோ நடக்குது. ஏமாற, நாங்கள் ஒன்னும் அருணன் & தோழர்கள் இல்லை .
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
07-ஏப்-202012:02:16 IST Report Abuse
ocean kadappa india மற்ற நாடுகளுக்கு சென்று கொரோனாவை பரப்ப சீனாவிலிருந்து பல பேர்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களால் மற்ற நாடுகளில் கோரோனா பரப்பபபட்டது. வேலை முடிந்தவுடன் சீனாவுக்கு திரும்பினர். ஏற்கனவே செய்த ஒப்பந்த படி திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். திருடன்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஏப்-202011:41:12 IST Report Abuse
Girija சீனா பொய்யும் புனைசுருட்டுகளுக்கும் தாயகம். கொரோனாவை கட்டுப்படுத்தியதாக பொய் கூறியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X