ஜப்பானில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம்?

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Japan's President Shinzo Abe, japan, emergency, japan fights corona, covid 19, coronavirus crisis, corona updates, ஜப்பான்,அபே,அவசரநிலை,பிரகடனம்

டோக்கியோ: ஜப்பானில் இன்று(ஏப்.,7) முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 209 நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் 13,46,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,654 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 2,78,445 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,906 ஆக உயர்ந்தது. இதுவரை 92 பேர் அங்கு பலியாகி உள்ளனர். 592 பேர் மீண்டுள்ளனர்.

இந்நிலையில், 55.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில், இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததை அடுத்த, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிபர் ஷின்சோ அபே 1 மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறி உள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே கூறுகையில், 'ஏப்., 7 முதல் ஜப்பானில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்துள்ளேன். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் இங்கு ஊரடங்கு கடுமை காட்டப்படாது. ஊரடங்கு காலத்திலும், மாகாண எல்லைகள் திறந்திருக்கும். மே 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜப்பானில் வணிக நிறுவனங்கள், காபி ஷாப்கள் போன்றவை தாமாக முன்வந்து விற்பனையை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-ஏப்-202015:36:46 IST Report Abuse
Natarajan Ramanathan ஜப்பானியர்களின் சுய ஒழுக்கம் மிகவும் அதிசயமானது. அரசின் சட்டங்களை மிக மிக சரியாக கடைப்பிடிப்பவர்கள்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
07-ஏப்-202012:04:55 IST Report Abuse
K.ANBARASAN ஜப்பானியர்கள் துன்பங்களை பலவாறு எதிர்கொண்டு பழக்கப்பட்டவர்கள் . இரெண்டாம் உலக போர் மற்றும் அணுகுண்டு தாக்குதல் மூலம் பேரழிவு ,நிலநடுக்கம் சுனாமி அணு உலை கசிவு எரிமலை குமுறல் ஆகியவற்றை சந்தித்தவர்கள். இதையும் வெற்றிகரமாக கடப்பார்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-ஏப்-202009:05:10 IST Report Abuse
அசோக்ராஜ் நாடு பிடிக்கும் ...வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருப்பவர்கள் ஜப்பானியர். சுய மரியாதை சமூகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X