இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Covid 19, drug export, donald trump, US, trump, hydroxychloroquine, trump coronavirus,  trump india, இந்தியா, டிரம்ப், டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்சிகுளோரோகுயின்,

வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு பதிலடி இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், கொரோனா பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை, அமெரிக்கா மார்ச் மாதம் ஆர்டர் செய்திருப்பதாகவும், அதனை அனுப்பி வைக்கும் படியும் அப்போது மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தினார். 'எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்' என மோடி கூறியிருந்தார்.


latest tamil news


இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது. ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும்.” என கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் டிரம்ப் வருகையின் போது, வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க இந்தியா விரும்பியது. அது நடைபெறவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போது 'பதிலடி இருக்கக்கூடும்' என டிரம்ப் கூறியிருப்பது. இதனை பாதிக்கலாம் என்கின்றனர்.


இவ்விஷயத்தில் இந்தியா இதுவரை முடிவு எடுக்கவில்லை. உள்நாட்டில் தேவை அதிகரித்துள்ளதால், ஏற்கனவே இம்மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

உலகளவில் அதிகம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மலேரியா எதிர்ப்பு மருந்தான இது, கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இருப்பினும், சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிகழ்வதால், இம்மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
07-ஏப்-202022:02:35 IST Report Abuse
Balamurugan Balamurugan அமெரிக்கவே பாரம்பரிய சித்த மருத்துவத்தில் அனைத்து நோய்களும் மருந்து உள்ளது இந்தியா மதிக்கவில்லை எந்த நாடு சித்த மருத்துவத்தை ஆதரித்தாலும் அவர்களுக்கு மருந்து கொடுப்போம்
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
07-ஏப்-202019:07:04 IST Report Abuse
Abbavi Tamilan ட்ரெம்பையும் கைதட்ட சொல்லி, விளக்கேத்த பார்க்க சொல்லி இருக்கலாமே ...
Rate this:
sankar - london,யுனைடெட் கிங்டம்
07-ஏப்-202020:37:23 IST Report Abuse
sankarபாய் கொஞ்சம் கண்விழித்தால் நலம் .... அமெரிக்க , ஐரோப்பிய நாடுகள் முன்னரே செய்தாயிற்று .... நாம்தான் கடைசி ...ஹையோ ...கையையோ ... எவ்வளவு சின்னபுள்ளத்தனம் .. ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே பாய் ??...
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
07-ஏப்-202018:20:21 IST Report Abuse
K.Sugavanam இந்த மிரட்டலெல்லாம் எங்க சிங்கத்துக்கு ஜுஜுபி.. பந்தாடிருவோமில்லா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X