பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (113)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால், உலகம் முழுவதும் இதுவரை, 13.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 74,647 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள், ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதனால், மிகப் பெரிய தொழிற்சாலைகள் முதல் சிறு சிறு தொழில் நிறுவனங்கள் வரை அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதனால், உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலையின்றி வீடுகளில் அடைந்துள்ளனர். ஒரு சில நிறுவனங்கள் மட்டும், தங்களது தொழிலாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற வாய்ப்பளித்துள்ளன.


latest tamil news
இந்நிலையில், சமீபத்தில் வெளியான, 'மிண்ட்' பத்திரிகையின் அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவில் மட்டும், 13.6 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்' எனத் தெரிவித்திருந்தது.latest tamil newsஇந்த கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டியவை குறித்தும், மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும் பொருளாதார வல்லுனருமான ரகுராம் ராஜன் தெரிவித்திருப்பதாவது:


அன்று வேலை இருந்தது!


கடந்த 2008 - 09ம் நிதியாண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அந்த நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில் மக்களால் வேலைக்குச் செல்ல முடிந்தது. அனைத்து நிறுவனங்களும் கடந்த காலங்களை விட சிறப்பாக செயல்பட்டன. இந்திய நிதி அமைப்புகள் வலுவாக இருந்தன. அரசின் கஜானாவும் பலமாக இருந்தது. ஆனால் இப்போது கொரோனாவுக்கு எதிராக நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில் மேலே சொன்ன எதுவுமே இல்லை.


latest tamil news
திட்டமிடல் அவசியம்

சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவின் பொருளாதாரம் இப்படி ஒரு அவசர காலத்தை சந்தித்ததில்லை. இதனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிந்த பிறகும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என, அரசு விரைவாகத் திட்டமிட வேண்டும்.
ஊரடங்கை தொடர்வது இந்தியாவில் மிகவும் கடினமான ஒன்று. எனவே, கொரோனா அதிகம் பரவாத இடங்களில், தேவையான முன் எச்சரிக்கைகளுடன், சில பொருளாதார நடவடிக்கைகளை எப்படித் துவங்குவது என, ஆலோசிக்க வேண்டும்.


latest tamil news
ஒரு மாதத்திற்கு போதாது

மாநில அரசுகள் நேரடி பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதத்தில், குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குகின்றன. இந்த நேரடி பணப் பரிமாற்றம், பெரும்பாலானவர்களைச் சென்றடையும்; ஆனால் நாட்டிலுள்ள அனைவரையும் சென்று அடையாது.
மேலும், இந்த சொற்பத் தொகை ஒரு குடும்பத்துக்கு ஒரு மாத காலம் வாழ போதுமானதாக இருக்காது. இதனால், இரண்டு பெரிய எதிர் வினைகளை எளிய குடும்பங்கள் மேற்கொள்ளும்.
ஒன்று, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு, வேறு மாநிலங்களுக்கு வந்து வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், இந்த கொரோனா பாதிப்பால், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்புவர். இது தற்போது நடந்து வருகிறது. அது மேலும் அதிகரிக்கும்.
அடுத்து, பிழைப்புக்கு வழி இல்லை என்றால், அவர்கள் ஊரடங்கை பெரிதாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் பிழைப்பை உறுதி செய்ய, ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லத் துவங்குவர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்கும். நிலைமை மேலும் மோசமடையும்.


latest tamil newsஆசிய அபிவிருத்தி வங்கி (ஏ.டி.பி.,) நடப்பு நிதியாண்டில் (ஏப்., 2020 முதல் மார்ச், 2021 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 4 சதவீதம் சரியும் எனக் கணித்துள்ளது, அதே நேரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, 3.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 13.6 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளதை சமாளிக்க, மத்திய அரசு, கட்சி பேதமின்றி பொருளாதார வல்லுனர்களை ஒன்றிணைத்து, இந்த நிலையை சமாளிப்பது குறித்து ஆலோசிப்பது அவசர அவசியம்.
இவ்வாறு அவர் அரசிற்கு தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
10-ஏப்-202019:49:06 IST Report Abuse
Tamilnesan இவர் சிவகங்கை செவத்த பையனின் கூட்டாளி.........புரிந்ததா?
Rate this:
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
10-ஏப்-202000:05:13 IST Report Abuse
ராமதாசன் இந்த ஆள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய் விட்டது.. என்னவோ இந்த cornonavala இந்தியால மட்டும் தான் பாதிப்பு மாதிரி கருத்து சொல்லிக்கிட்டு திரிகிறாரு.. இந்திய விட்டு ஓடுனவங்க இப்போ எதுக்கு கருத்து சொல்லணும்.. வேண்டும் ஆனால் அமெரிக்கா பற்றியோ இல்லை பிரிட்டன் பற்றியோ சொல்லு
Rate this:
Cancel
Hari Iyer - Austin,இந்தியா
09-ஏப்-202007:03:28 IST Report Abuse
Hari Iyer பொருளாதாரத்தை செயற்படுத்த பலவழிகள் உள்ளன.ஆனால் யாரும் சொல்ல மாட்டார்கள். பல்கலைக் பொruளாதார பேராசிரியர்களை கூட்டி யோசனையை கேட்பது நல்லது. பணம் ஒரு பெரும் பிரச்சினை. இதை ஒரு டாலர் 25 ரஸ் என்று மாற்றி அமைக்க வேண்டும். மெக்ஸிகோ 10 பெசோ யுவன் 10 ஒரு டாலர் சமம் என்றால் 25ர்ஸ் ஒரு டாலர் என்று கொள்ளலாம்.மக்களிடமிடம் இருந்து தங்கம் பெற்று நோட்டு அடிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X