புது பார்லிமென்ட் கட்டுவதை ஒத்திவைங்க: சுப்ரமணியன் சுவாமி

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
subramanian swamy, parliament, Modi, PM modi, coronavirus, corona, coronavirus pandemic, mplad fund, பார்லிமென்ட், கட்டடம், ஒத்திவையுங்கள், சுப்ரமணியன்சுவாமி, கோரிக்கை

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எம்.பி.,க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், ரூ.25 ஆயிரம் கோடி செலவில் புதிய பார்லி கட்டும் பணியை ஓராண்டுக்கு ஒத்தி வைக்குமாறு பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எம்.பிக்களின் ஓராண்டு சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யவும், எம்.பி.,க்கள் மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள் தாமாக முன்வந்து 30 சதவீதம் சம்பளத்தை குறைக்க ஒப்புதல் அளித்தனர். பிரதமர், மத்திய அமைச்சர்களின் சம்பளமும் குறைக்கப்படுகிறது. தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்படுவதால் கிடைக்கும் 7,900 ரூபாய் கோடி கொரோனா நிதியில் சேர்க்கப்படுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.


latest tamil newsஇது தொடர்பாக பாஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டர் பதிவில், ‛எம்.பி.,க்களின் ஊதியத்தை ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைத்துள்ளதை நான் வரவேற்றுள்ளேன். ரூ.25,000 கோடி புதிய பார்லிமென்ட் கட்டட கட்டுமானமும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்,' எனப்பதிவிட்டுள்ளார்.


யார், யாருக்கு எவ்வளவு சம்பளம்..?

1. ஜனாதிபதிக்கு மாதத்திற்கு ரூ. 5 லட்சம் அடிப்படை சம்பளமாகவும், இதர பயன்களும் வழங்கப்படுகிறது.
2. துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சமும், கவர்னர்களுக்கு ரூ. 3.5 லட்சம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனுடன் மருத்துவ செலவு, தங்குமிடம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
3. பிரதமருக்கு ரூ. 2 லட்சம் அடிப்படை சம்பளத்துடன், எம்.பிக்களுக்கு உரிய மற்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
4. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்களுக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனுடன் தொகுதி அலவன்ஸ் ரூ.45 ஆயிரமும், பார்லி., அமர்வுக்கு ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.


latest tamil news

காங்.,கட்சிக்குள் சலசலப்பு

எம்.பி.,க்களின் சம்பளத்தை குறைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்., தலைவர்கள் சசி தரூர், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காங்., செய்தி தொடர்பாளர் ரன் தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‛மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே, எம்.பி.,க்களின் சம்பளத்தை குறைக்கும் முடிவுக்கு காங்., முழு ஆதரவு அளிக்கிறது. அதே நேரத்தில் எம்.பி.எல்.ஏ.டி என்பது தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்படுவது. இதனை நிறுத்துவதால் தொகுதிக்கு இழப்பு என்பதோடு, எம்.பிக்களின் பங்கு மற்றும் செயல்பாடுகளின் மதிப்பை குறைக்கும்'. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நான் ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியை மாநிலங்களின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்துமாறு கூறி வருகிறேன். தற்போதைய அரசின் முடிவு வரவேற்கதக்கது என காங்.,மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.எம்.பிக்கள் சம்பளம் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து விவகாரத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு காரணமாக காங்.,கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
14-ஏப்-202000:28:03 IST Report Abuse
NARAYANAN.V கியூவிலே சொத்தைகள்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
07-ஏப்-202019:10:27 IST Report Abuse
Nallavan Nallavan நீங்களே விலகுங்கள் CAA வுக்கு 20000 கோடி , ஆனால் கொரானவுக்கு இதை விட குறைவு இதே மாதிரி தேவை அற்ற இந்த பார்லிமென்ட் புதுசா கட்ட செலவு வீண் தானே
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ பொதுவாக சிலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். பத்திரிகை விளம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும். பார்லிமென்ட் மற்றும் சட்டசபை அங்கத்தினர்களுக்கு அளிக்கும் இலவசங்களை குறைக்கவேண்டும். மந்திரிகளுக்கு பின்னால் தொடரும் கார்களை குறைக்க வேண்டும். தவிர அங்கத்தினர்கள் மற்றும் மந்திரிகளுக்கு சம்பளம், படிகளுக்கு மற்றவர்களுக்கு அளிக்கும் வரி சலுகைகள் மட்டுமே அளிக்க வேண்டும். சிலைகள் செய்ய அரசாங்கம் வரிப்பணத்தை சிலவு செய்யக்கூடாது. புதிய கார்கள் வாங்குவதை ஐந்து வருடம் நிறுத்தி வைக்க வேண்டும். சிக்கனம் மிகவும் அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X