கொரோனா தடுப்பு நிதி: சோனியா யோசனை

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு எவ்வாறெல்லாம் திரட்டலாம் என்பது குறித்து காங்., தலைவர் சோனியா, 5 யோசனைகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.



latest tamil news


கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற எம்பி.,க்கள் ஏப்.,01ம் தேதி முதல் ஓராண்டு ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நேற்று (ஏப்.,06) அறிவித்தது. இந்நிலையில், காங்., தலைவர் சோனியா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 5 முக்கிய யோசனைகளையும் வழங்கி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news


அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு வரவேற்கிறேன். செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து நிதியையும், பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் கொண்டு வந்து, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி எப்போதும் கைவசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news


மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் இணையதளம் மூலம் கொடுக்கும் அனைத்து விளம்பரங்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மத்திய அரசு, நாட்டின் முக்கியப் பகுதிகளை அழகுபடுத்துதல் மற்றும் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கும் ரூ.20 ஆயிரம் கோடியை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது நாடாளுமன்றம் இயங்கும் பழைய கட்டடத்திலேயே இயங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது எனக் கருதுகிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-ஏப்-202020:38:08 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பரவா இல்லை இந்திரா கனவில் வந்து கூறச்சொன்னாரோ என எண்ணத்தோன்றுகிறது.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
07-ஏப்-202020:03:01 IST Report Abuse
Mithun உனக்கு என்ன பிரதமர் வெளிநாடு போகக்கூடாது அதானே வயித்தெரிச்சல்
Rate this:
Cancel
jakku -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202019:53:40 IST Report Abuse
jakku நல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளாக இருக்கின்றதே. இதில் ஒன்றை கூட நடைமுறைப்படுத்ததே நம் அரசு. நம் பிரதமர் இதை கவனித்து செயல்பட்டால் போதுமே. அதை விடுத்து மக்களுக்கு நல்லது செய்யும் m. p. பணத்தை கொடுக்காமல் தடுப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X