மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பும் பிரமுகர்கள்..!

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
லண்டன்: ஐரோப்பாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவம் பயின்று விட்டு அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களாக இருக்கும் பிரமுகர்கள் , மீண்டும் மருத்துவ சேவைக்கு திரும்பி வருகின்றனர்.கொரோனா தொற்றை எதிர்த்து போராடி வரும் மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் குழந்தைகளை பராமரிக்கவும், தொற்றால் தனிமைப்படுத்தி
Politicians, public figures, doctors, medical career,  coronavirus, celebrities, athletes, corona, covid-19, tackle corona, medicos,  கொரோனா, கொரோனாவைரஸ், அரசியல்வாதிகள், டாக்டர்கள்

லண்டன்: ஐரோப்பாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவம் பயின்று விட்டு அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களாக இருக்கும் பிரமுகர்கள் , மீண்டும் மருத்துவ சேவைக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனா தொற்றை எதிர்த்து போராடி வரும் மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் குழந்தைகளை பராமரிக்கவும், தொற்றால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமென்ற காரணங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழலில் உள்ளனர். இதனால் ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைக்க குறிப்பிட்ட திறன் கொண்ட பயிற்சியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அயர்லாந்து பிரதமரான லியோ வரட்கர், கடந்த மாதம் முதல் வாரத்திற்கு ஒருநாள் டாக்டராக சேவையாற்றி வருகிறார்.'லியோ வரட்கரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பலரும் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். சிறிய அளவிலாவது உதவி செய்ய லியோ விரும்பி பணியாற்றி வருகிறார்' என பிரதமரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஜூனியர் டாக்டராக டப்ளினியில் வரட்கர் பணியாற்றி உள்ளார். 2010ல் முழு அரசியல்வாதியாக மாறுவதற்கு முன் பொது டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் தான் அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.மருத்துவ துறைக்கு வரட்கர் திரும்பியிருப்பதை கண்டு நர்ஸ், டாக்டர்கள் படித்துவிட்டு, வெவ்வேறு துறைகளில் உள்ள பிரமுகர்கள் மீண்டும் முன்னாள் தொழிலுக்கு பணியாற்ற வருவது ஐரோப்பாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக போரை வலுப்படுத்துவதாக உள்ளது.


திரைப்பட இயக்குனர் டூ டாக்டர் :


திரைப்பட இயக்குனரும், டிவி தயாரிப்பாளருமான தாமஸ் லில்டிக்கு பிரெஞ்சு மருத்துவ டிவி நாடகமான 'ஹிப்போகிரேட் ' படப்பிடிப்புக்காக ஒரு மருத்துவமனையில் இருந்தபோது தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அவர், சில நாட்களுக்கு பின் 2014ம் ஆண்டு தான் எந்த மருத்துவமனையில் இருந்து விலகினாரோ, அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்ற துவங்கியுள்ளார். 'மிகவும் திறமையான டாக்டர்களுக்கு என்னால் முடிந்த சிறிய அளவுக்கு உதவ முன்வந்தேன். தங்களுடைய பணியை நன்கு அறிந்த டாக்டர்கள், இதனால் சில மணி நேரம் ஓய்வெடுக்க முடியும்' என லு ஜர்னல் டு டிமாஞ்சே இதழுக்கு அளித்த பேட்டியில் தாமஸ் லில்டி கூறினார்.


latest tamil news
மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு


பிரெஞ்சு விளையாட்டு பிரமுகர்களும் பலரும் முன்னாள் தொழில்களுக்கு திரும்பியுள்ளனர். கூடைப்பந்தாட்ட வீரரான ஸ்டெபானி டோஸ் சாண்டோஸ் மற்றும் ஜூ ஜிட்சு சாம்பியனான ஜூலியன் மாத்தியூ ஆகியோர் செவிலியர்களாக பணிபுரிகின்றனர். ரக்பி நடுவரான தாமஸ் கராபாஸ் பேயோன் மருத்துவமனையில் பணிக்கு திரும்பியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எம்.பி தாமஸ் மெஸ்னியர், கரோலின் பியாட் , பெர்னார்டு ஜோமியர் உள்பட ஐரோப்பா முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் பலரும் தங்களது முந்தைய மருத்துவர், செவிலியர் பணிக்கு மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
07-ஏப்-202020:46:49 IST Report Abuse
Swaminathan Chandramouli எதற்கு கொரோனா வைரஸ் ஐ பரப்புவதற்காகவா ?
Rate this:
Cancel
07-ஏப்-202020:21:20 IST Report Abuse
ஆரூர் ரங் டாக்டர் ஸ்டாலின், டாக்டர் திருமா, டாக்டர் கமல், டாக்டர் மன்மோகன், டாக்டர் பசி உடனே கரோனா வார்டுக்கு விரையவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X