ஊரடங்கை மீறுபவர்களை அவமரியாதையாக நடத்தாதீர்கள்: டிஜிபி அறிவுறுத்தல்| Don't mistreat people who violate curfew: DGP Tripathy | Dinamalar

ஊரடங்கை மீறுபவர்களை அவமரியாதையாக நடத்தாதீர்கள்: டிஜிபி அறிவுறுத்தல்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (6) | |
சென்னை: ஊரடங்கை மீறி வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று போலீசாரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவல் துறை உயர்அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார்.கூட்டத்தில் பேசிய திரிபாதி 'ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும்

சென்னை: ஊரடங்கை மீறி வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று போலீசாரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.



latest tamil news



கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவல் துறை உயர்அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார்.


latest tamil news



கூட்டத்தில் பேசிய திரிபாதி 'ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவர்களை அவமரியாதையாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தவிர்க்க முடியாத காரணங்களினாலே மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். கொரோனா அபாயத்தை அவர்களுக்கு எடுத்து கூறி அனுப்புங்கள். பைக்குகளில் வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணையின் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்' இவ்வாறு டிஜிபி திரிபாதி பேசினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X