இன்று வானில் தோன்றுகிறது 'சூப்பர் பிங்க் மூன்'

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: 2020ம் ஆண்டின் பெரிய, பிரகாசமாக சூப்பர் பிங்க் மூன் இன்று வானில் தோன்றுகிறது. இந்தியாவில் நாளை(ஏப்.,8) காலை 8.05 மணிக்கு இந்நிகழ்வு நடக்கும்.நிலவு பவுர்ணமியை அடையும் போது, பூமிக்கு மிக அருகில் வருகையில், சூப்பர் பிங்க் மூன் தோன்றும். இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் பிரகாசமான முழுநிலவு இன்று நள்ளிரவு தோன்றுகிறது. இது வசந்த காலத்தின் முதல் சூப்பர் பிங்க் மூன் என
Super Pink Moon, NASA, super moon, super moon 2020,   சூப்பர்மூன்,சூப்பர்பிங்க்மூன்,நாசா

புதுடில்லி: 2020ம் ஆண்டின் பெரிய, பிரகாசமாக சூப்பர் பிங்க் மூன் இன்று வானில் தோன்றுகிறது. இந்தியாவில் நாளை(ஏப்.,8) காலை 8.05 மணிக்கு இந்நிகழ்வு நடக்கும்.

நிலவு பவுர்ணமியை அடையும் போது, பூமிக்கு மிக அருகில் வருகையில், சூப்பர் பிங்க் மூன் தோன்றும். இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் பிரகாசமான முழுநிலவு இன்று நள்ளிரவு தோன்றுகிறது. இது வசந்த காலத்தின் முதல் சூப்பர் பிங்க் மூன் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாளை(ஏப்.,8) காலை 8.05 மணிக்கு இந்த நிகழ்வு தோன்றும் என்பதால் மக்களால் இரவில் ரசிக்க முடியாது. இரவு நேரமாக இருக்கும் வெளிநாடுகளில் இதனை வெறும் கண்களால் காண முடியும்.


latest tamil news



சாதாரணமாக பூமியில் இருந்து 2,38,855 மைல் தொலைவில் இருக்கும் நிலா, இன்று 2,21,851 மைல் தொலைவில் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும். அடுத்த சூப்பர் பிங்க் மூன் நிகழ்வு இந்த ஆண்டில் மே மாதத்திலும், அக்., மாதத்திலும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. சூப்பர் பிங்க் மூன் என அழைக்கப்பட்டாலும், அப்போது நிலா பிங்க் நிறத்தில் இருக்காது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-ஏப்-202019:43:06 IST Report Abuse
A.George Alphonse மக்கள் சூப்பர் பிங்க் மூனை பார்த்து ரசிக்கும் மூடிலா இப்போது இருக்கிறார்கள். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X