கொரோனாவால் காதலரை பிரிந்து தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

வெஸ்ட்மினிஸ்டர்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் காதலி கேரி சைமஸ்ன்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார்.



latest tamil news




போரிஸ் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரி தனிமையில் உள்ளார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தற்போது வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது சமீபத்திய கேர்ள் பிரண்ட் கேரி சைமண்ட்ஸ் தற்போது ஆறு மாதங்கள் கர்ப்பமாக உள்ளார்.கர்ப்ப காலத்தில் காதலருடன் இருக்க முடியாமல் அவர் தனிமையில் உள்ளார்.தெற்கு லண்டனில் உள்ள கேம்பர்வெல் பகுதியில் தன் நாய் டிலினுடன் அவர் தனியாக வசித்து வருகிறார். கேரிக்கும் மிதமான கொரோனா அறிகுறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

32 வயதான கேரி முன்னாள் பிரிட்டன் அரசு ஆலோசகராகப் பணியாற்றியவர். அப்போது நாடாளுமன்ற அமைச்சராக இருந்த பிரதமர் போரிஸுடன் அவர் காதல் வயப்பட்டார். திருமணமாகாமல் கர்ப்பமான அவர் பிரிட்டன் மீடியாக்களால் விமர்சிக்கப்பட்டார். பல மனைவிகள், வாரிசுகள் கொண்ட போரிஸ் எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளானார்.

தற்போது கொரோனா தாக்கத்தை அடுத்து போரிஸ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பிரதமர் நலமுடன் வீடு திரும்ப நாடே பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறது.உலக நாட்டுத் தலைவர்களின் முக்கியமான போரிஸ்-ன் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள், சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. போரிஸ் ஜான்ஸன் நலமுடன் வீடு திரும்ப பிராத்திப்போம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
07-ஏப்-202022:52:42 IST Report Abuse
பெரிய ராசு மஞ்சள் துண்டுக்கு அப்பன் போல கீது ..
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
07-ஏப்-202021:51:30 IST Report Abuse
Anbu Tamilan He has more affairs and children. He is a play boy
Rate this:
Cancel
anbu - podicherry,இந்தியா
07-ஏப்-202020:54:50 IST Report Abuse
anbu துணைவி யா இணைவியா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X