ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு:கிறிஸ்டியன் மிகைலுக்கு ஜாமின் மறுப்பு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020
Share
Advertisement
AgustaWestland Case, Christian Michel, Delhi, High court, Delhi HC, Coronavirus, Corona, Covid-19, bail, Tihar jail, Tihar, Court, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, கிறிஸ்டியன் மிகைல், இடைக்கால ஜாமின்,   உயர்நீதிமன்றம்

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடம், ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் போடப்பட்டதில் ரூ. 3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.


latest tamil news



இந்த ஊழல் விவகாரத்தில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிகைலை 59, 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு குறித்த விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் திஹார் சிறையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தனக்கு இடைக்கால ஜாமின் கோரியும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிறிஸ்டியன் மிகைல், திஹார் சிறையில் பாதுகாப்புடன் தான் உள்ளார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிபதி முக்தா குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தார். இதில் திஹார் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X