பொது செய்தி

இந்தியா

ஒருவர் 30 நாளில் 406 பேருக்கு கொரோனாவை பரப்ப முடியும்: மத்திய அரசு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Lav Agarwal, Health Secretary, ICMR, Central government, corona update,covid19 India,India fights corona,coronavirus crisis,coronavirus update,lockdown, quarantine, curfew, india, coronavirus, covid-19, corona, corona isolation, self isolation

புதுடில்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் 30 நாட்களில் 406 பேருக்கு, கொரோனா தொற்றை பரப்ப முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்ததாவது: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.,14ம் தேதிக்குப்பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இதுகுறித்து யாரும் கற்பனையாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.


latest tamil news



ஊரடங்கு, சமூக விலகலை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால்ல நிலைமை கை மீறி சென்றுவிடும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால், 30 நாளில் 406 பேருக்கு கொரோனா தொற்றை பரப்ப முடியும். ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் முயற்சியில் ரயில்வே முழு வீச்சில் இயங்கி வருகிறது. நாட்டில் 133 இடங்கில் 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகளை ரயில்வே தயார் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202022:29:00 IST Report Abuse
ஆப்பு ஊரடங்கை நீட்டிக்கப் போறாங்களா இல்லையான்னு இவருக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X