பொது செய்தி

இந்தியா

தென் கொரியா போல் கொரோனா சோதனை : டில்லி முதல்வர்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த தென்கொரியா நாட்டை போல் பெரிய அளவிலான சோதனைகளை செய்ய உள்ளதாக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பின்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளது. வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு கட்ட செயல்திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. சோதனை தடமறிதல், சிகிச்சை, குழுவேலை போன்றவை மற்றும் கண்காணிப்பு ஆகியவை ஆகும். மேலும் டில்லியில் உள்ள ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்கு உள்ள 12 ஆயிரம் அறைகளில் 8 ஆயிரம் அறைகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும்.



latest tamil news



விரைவில் 50 ஆயிரம் பேர்களை சோதிக்க தேவையான கருவிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு கருவிகள் விநியோகம்செய்யப்படும். தென்கொாியா நாடு ஒவ்வொரு தனி நபரையும் பெரிய அளவிலான சோதனைகள் மூலம் அடையாளம் கண்டுள்ளது. அந்நாட்டை போன்று நாங்களும் பெரிய அளவிலான சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202022:08:21 IST Report Abuse
Indian இன்னொரு மாநாடு நடத்த போறீங்களா? எல்லா பிரச்சினையும் உன் ஊர்ல இருந்து தான் ஆரம்பிச்சுது. இப்ப வந்து ட்ராமா போட வேணாம்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஏப்-202020:27:56 IST Report Abuse
Janarthanan வேற வழி அந்த கூட்டம் எங்கு எங்கு புழங்கியது என்று தெரியாது ??டெல்லியை காப்பாற்ற செய்து தான் ஆக வேண்டும் ??? இவர் சொதப்பல்/மென்மையான approach இந்தியா அவதி படுகிறது ?? இப்ப வித விதமாக பேசி ஊரை ஏமாற்ற ட்ராமா ??? migrant ஒர்க்கேர்ஸ் விரட்டி அடித்த பாவம் சும்மா விடாது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X