'பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது'

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Boris Johnson, ICU, UK, coronavirus, UK PM, Corona, COVID-19, Ventilator, stable, Intensive care unit, பிரிட்டன்,பிரதமர்,போரிஸ்ஜான்சன்,ஐசியூ

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவ உபகரணங்கள் இன்றி அவர் சுவாசித்து வருவதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ், பிரிட்டனில் இதுவரை 51,608 பேருக்கு பரவி உள்ளது. 5,373 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக, நேற்று ஐசியூ.,வில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டனர்.


latest tamil news



இந்நிலையில் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை குறித்து, அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'போரிஸ் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் இன்றி அவர் சுவாசித்து வருகிறார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். நிமோனியா பாதிப்பு அவருக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




யார் வழிநடத்துவார்கள்?


இந்நிலையில் நாட்டை யார் வழிநடத்துவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் என்பவரை போரிஸ் ஜான்சன் பரிந்துரைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டங்களுக்கு ராப் தலைமை தாங்குவார் எனவும், ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமர் இல்லாத நிலையில் பதிலளிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது எனவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
08-ஏப்-202001:46:59 IST Report Abuse
Allah Daniel மிஸ்..
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
07-ஏப்-202022:13:44 IST Report Abuse
Rajalakshmi அப்பாடி.....நிம்மதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X