நடமாடும் முதற்கட்ட கொரோனா சோதனை மையம் ; கேரள சுகாதாரத்துறை

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020
Share
Advertisement

கொச்சி : கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடமாடும் முதற்கட்ட கொரோனா சோதனை மையம் தயார்நிலையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் தாக்கி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக போராடி வருகிறது. அதற்கு ஒத்துழைப்பு அளித்து ஒவ்வொரு மாநில அரசும் நோய் தொற்றை எதிர்த்து போராடி வருகிறது. இந்த மகத்தான பணியில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இதுவரை இந்தியாவில் 4858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், 137 பேர் வரை பலியானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




தொடர்ந்து, கொரோனா தொற்று பரிசோனைக்காக சந்தேகத்திற்கு உள்ளானவர்களின் ரத்த மாதிரிகள் சேகரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நடமாடும் முதற்கட்ட சோதனை மையம் தயாராக உள்ளதாக கேரளாவின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது : கடந்த சில நாட்களாக கொரோனா சோதனை தொடர்பாக உருவாக்கிய முயற்சி தயாராக உள்ளது. முழுமையான சமூக அளவிலான சோதனை நடத்தும் நிலை உருவானால் அதை எதிர்கொள்ளவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொருத்து இதை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லலாம். சோதனை செய்வோர் தங்களது பரிசோதனை மாதிரிகளை அதில் அளித்தவுடன் அங்கிருந்து அது மத்திய பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X