'கோ கொரோனா' கோஷம் பிரபலமானது ; மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

மும்பை : கொரோனா வைரசின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 'கோ கொரோனா' கோஷம் உலக பிரபலமாகி விட்டதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல தரப்பட்ட முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடந்த பிப்., 20 ம் தேதி மும்பையில் நடந்த பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், புத்த மத துறவிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையாக கோ கொரோனா என கோஷம் எழுப்பினர். அவர்களுடன் அத்வாலேவும் கோஷமிட்டார்.


latest tamil news



இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. தொடர்ந்து, 'கோ கொரோனா' என கோஷம் எழுப்பினால் கொரோனா போய்விடுமா என எதிராக விமர்சனங்களை கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.,5) இரவில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டில் உள்ள பலரும் வீடுகளில் விளக்கு ஏற்றி கோ கொரோனா என கோஷமிட்டனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், கடந்த பிப்., மாதத்தில் கோ கொரோனா கோஷத்தை கூறினேன். அப்போதைய நிலைமையில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில் 'கோ கொரோனா' என கூறினால் கொரோனா போய்விடுமா என சிலர் கேட்டனர். தற்போது அந்த வாசகத்தை உலகம் முழுவதும் கேட்கமுடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
08-ஏப்-202007:58:44 IST Report Abuse
natarajan s இதுகூட நல்ல யுக்தி தான். நமது டாக்டர்களை இதெற்கு மருந்து கொடுப்பதாய் விட்டு நோயாளிகளின் காதில் go korona என்று கூவ சொல்லலாம் . பயன் கிடைத்தாலும் கிடைக்கும். மருந்து செலவு குறையும்.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
08-ஏப்-202005:37:00 IST Report Abuse
Anandan இப்படி பலபேர் மூளை மழுங்கியவர்களாக அமைச்சரவையில் இருக்கிறார்கள், காலக்கொடுமை.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
08-ஏப்-202005:31:39 IST Report Abuse
ocean kadappa india ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் ஜின் பிங் எங்கே அந்த ஆள். உலகில் இவ்வளவு அநியாயங்களை நிகழ்த்தியவன் எங்கே. எங்கே.எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே. எங்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X