பொது செய்தி

இந்தியா

அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: குஜராத் அரசு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஆமதாபாத்: கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news



இதனிடையே குஜராத் மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீஸ், சுகாதாரம், துப்புரவு தொழிலாளர்கள், வருவாய் மற்றும் உணவுவிநியோகத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இந்நிலையில் தொற்று நோய் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும்இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
08-ஏப்-202005:24:28 IST Report Abuse
 Muruga Vel வேலைக்கு போகாம வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஐம்பது சதவிகிதம் கட் பண்ணுங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X