தென் கொரியர்களை வீட்டைவிட்டு வெளியே வர விடாமல் தடுக்குமா ரிஸ்ட் பேன்ட்?

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020
Share
Advertisement

சீயோல் : தென் கொரியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிற நாடுகளைப் போல சமூக விலகலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



latest tamil news



சட்டத்துக்குப் புறம்பாக வெளியே செல்வோருக்கு ஓராண்டு சிறை என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையும் மீறி பலர் வெளியே நடமாடினர். இவர்களை தொழில் நுட்ப ரீதியாகத் தக்க ஏற்ற வழிகளை யோசித்தது. வெளியே செல்லும் பலர் செல்போனை மறக்காமல் எடுத்துச் செல்லுவர். அதில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் எனப்படும் ஜிபிஎஸ் இருக்கும். இதனை காவலர் கண்காணிப்பு அறையில் உள்ள செயலி மூலம் கண்காணித்து வெளியே செல்வோரை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டிருந்தது.


latest tamil news



இதனை அறிந்த தென் கொரியர்கள் சாமர்த்தியமாக ஜிபிஎஸ்-ஐ ஆஃப் செய்து அல்லது செல்போனை எடுத்துச் செல்லாமல் வெளியே நடமாடினர். வெறுத்துப்போன காவல் துறை அடுத்த முயற்சியாக எலெக்ட்ரானிக் ரிஸ்ட் பேன்ட் அறிமுகம் செய்துள்ளது.


latest tamil news



வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த பேன்டை அணிய வேண்டும். இவர்கள் வெளியே சென்றால் காவலர்களுக்கு சிக்னல் வந்துவிடும். உடனே எச்சரிக்கப்படுவர். இந்த திட்டத்திலும் சிறு குறைகள் உள்ளன என்றபோதிலும் இதனை நடைமுறை படுத்திப் பார்க்கலாமென தென் கொரிய அரசு முடிவெடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X