கொரோனாவால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு குறைவு: ஆய்வில் தகவல்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் மற்றவர்களை விட, கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுவதில்லை என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுகு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.



latest tamil news



அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 43 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் இதழில் வெளியாகியுள்ளது. மார்ச்.13 முதல் 27 வரை இரு வாரங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 80 சதவீதம் பேருக்கு , அதாவது 37 கர்ப்பிணி பெண்களுக்கு லேசான தொற்றும், 15 சதவீதம் பேருக்கு தீவிரமான கொரோனா தொற்றும், 5 சதவீதம் அதாவது 2 பெண்களுக்கு மோசமான தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று உறுதியான 29 கர்ப்பிணி பெண்களில் சாதாரண அறிகுறியுடன் உள்ள 25 பேர் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் அளவுக்கு இருப்பதாகவும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியோ தேவையில்லை. ஆண்டிபார்டம் பெண்கள் யாரும் சேரவில்லை என்பதால் ஆக்ஸிஜன் கூடுதலாக தேவையில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகியுள்ளது.


latest tamil news



முந்தைய சார்ஸ் மற்றும் ஹெச்.ஒன்.என்.ஒன் தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களின் வெளிப்படுத்திய முடிவுகள், தற்போதைய ஆய்வு முடிவுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாகும். இரண்டு தொற்று நோய்களால் கர்ப்பிணி பெண்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியிருந்தனர் . மேலும் பொதுமக்களோடு ஒப்பிடும் போது கர்ப்பிணி பெண்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உண்மையான ஆபத்தின் அளவைப் புரிந்து கொள்ள கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க கர்ப்பிணி பெண்களை மருத்துவமனை சோதனை நடத்த வேண்டுமென ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது 14 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் தென்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது அனைத்து மகப்பேறியல் சோதனைகள் வழங்க துவங்கிய பின்னர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
07-ஏப்-202022:26:24 IST Report Abuse
Abbavi Tamilan ஏற்கெனவே கணவன் மனைவி வீடுகளில் தனித்து இருக்கிறார்கள், இதில் இப்படி ஒரு செய்தியா? புரடிக்டிவிட்டி அதிகரிக்க போகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X